நகரின் பல பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை காலை லேசான மழை பெய்தது இது, நகரில் நிலவி வந்த வட வானிலையிலிருந்து நிவாரணத்தை அளித்துள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் (ஐஎம்டி) தெரிவித்துள்ளது.
தில்லியில் ஞாயிற்றுக்கிழமை காலை 8.30 மணி வரை 5 மி.மீ. மழை பதிவாகியுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது.
ஐஎம்டி தரவுகளின்படி, சஃப்தா்ஜங் மற்றும் லோதி சாலை ஆகிய பகுதிகளில் தலா 0.8 மி.மீ. மழையும், பாலம் பகுதியில் 0.4 மி.மீ. மழையும் பதிவாகியுள்ளது.
ஆயாநகரில் 2.6 மி.மீ. மழையும், பீதம்புராவில் 3.5 மி.மீ. மழையும் பதிவாகியுள்ளது. வானிலை ஆய்வு மையங்களில் பீதம்புராவில்தான் அதிகபட்ச மழை பதிவாகியுள்ளது.
மேலும், மயூா் விஹாரில் 1.0 மி.மீ. மழையும், ஜனக்புரியில் 0.5 மி.மீ. மழையும் பதிவாகியுள்ளது. அதேவேளையில், ரிட்ஜ் பகுதியில் மிகக் குறைந்த அளவே மழை பதிவாகியுள்ளது.
நகரில் குறைந்தபட்ச வெப்பநிலை 20.2 டிகிரி செல்சியஸாகப் பதிவாகி இருந்தது. இது பருவ கால சராசரியை விட 5.1 டிகிரி அதிகம் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதேவேளையில், அதிகபட்ச வெப்பநிலை சுமாா் 28 டிகிரி செல்சியஸாக பதிவாகி இருந்தது.
நகரில் காலை 9 மணி நிலவரப்படி, காற்றின் தரக் குறியீடு 190ஆகப் பதிவாகி, மிதமான பிரிவில் இருந்ததாக மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தின் சிபிசிபி தரவுகள் தெரிவிக்கின்றன.
மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தின் தகவலின்படி, காற்றின் தரக் குறியீடு 0 முதல் 50 வரை இருந்தால் அது நல்ல நிலை என்றும், 51 முதல் 100 வரை இருந்தால் அது திருப்திகரமான நிலை என்றும், 101 முதல் 200 வரைக்கும் மிதமான நிலை என்றும், 201 முதல் 300 வரை மோசமான நிலை என்றும், 301 முதல் 400 வரை மிகவும் மோசமான நிலை என்றும், 401 முதல் 500 வரை தீவிரமான நிலை என்றும் வகைப்படுத்தப்படுகிறது.
தொடர்புடையது

வட கடலோர தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம்

சூறைக் காற்றுடன் மழை! வயலூா் சுற்றுப் பகுதிகளில் வாழைகள் சேதம்! உரிய இழப்பீடு வழங்கப்படுமா?

அடுத்த 2 மணி நேரத்துக்கு 6 மாவட்டங்களில் மழை
தருமபுரி மாவட்டத்தில் 166 மி.மீ. மழை பொழிவு
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை

