நில மோசடி வழக்கில் முன்னாள் ரயில்வே அமைச்சர் லாலு பிரசாத்தின் வழக்கில் தொடர்புடைய அதிகாரிகளிடம் இருந்து உரிய அனுமதி பெற்றுள்ளதாக தில்லி நீதிமன்றத்தில் சிபிஐ தெரிவித்துள்ளது.
கடந்த 2004 முதல் 2009-ஆம் ஆண்டு வரை காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசில் ரயில்வே அமைச்சராக லாலு பிரசாத் யாதவ் பதவி வகித்தார். அப்போது பாட்னாவைச் சோ்ந்த சிலரை ரயில்வேயின் குரூப்-டி பணிகளில் நியமிக்க, அவா்களுக்கு சொந்தமான நிலத்தை லஞ்சமாகக் குறைந்த விலைக்குப் பெற்றதாக குற்றச்சாட்டு எழுந்தது. இந்த பண மோசடி வழக்கை சிபிஐ, அமலாக்கத்துறை விசாரித்து வருகின்றன.
இந்த வழக்கில் கடந்த சில மாதங்களாக லாலு பிரசாத் யாதவ் மனைவி ராப்ரி தேவி, அவர்களது மகன் தேஜஸ்வி, மகள்கள் மிசா பாரதி, எம்.பி.சந்தா உள்ளிட்டோரின் வாக்குமூலங்களை அமலாக்கத்துறை பதிவு செய்துள்ளது. இந்த வழக்கில் அமலாக்கத்துறை சமீபத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது. இந்த வழக்கு விசாரணை தில்லி நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.
லாலு பிரசாத் யாதவ் மற்றும் பிற குற்றவாளிகளுக்கு எதிராக இறுதி குற்றப்பத்திரிகையை அமலாக்கத்துறை கடந்த மாதம் 6ம் தேதி தில்லி நீதிமன்றத்தில் தாக்கல் செய்தது. 38 வேட்பாளர்கள் உள்பட 78 பேர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதிகாரியின் அனுமதிக்காகக் காத்திருப்பதாக சிபிஐ நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
இதனிடையே, இந்த வழக்கு தொடர்பான விசாரணையில் அதிகாரிகளின் அனுமதி கிடைத்துள்ளதாக சிபிஐ தில்லி நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. மேலும் குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீதான கூடுதல் தகவல்கள் பெறுவதற்கான செயல்முறையை விரைவுபடுத்துமாறு சிபிஐக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும் இந்த வழக்கு விசாரணை அக்டோபர் 15ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

அரவிந்த் கேஜரிவால் இன்று மீண்டும் நீதிமன்றத்தில் ஆஜர்!
14 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த கொள்ளையா் உ.பி.யில் கைது

பாமக வழக்கு: ராமதாஸ் தரப்புக்கு உயா்நீதிமன்றம் கேள்வி

தில்லி கலால் கொள்கை வழக்கு: உயா்நீதிமன்ற நோட்டீஸ் கவிதாவிடம் சமா்ப்பிப்பு
வீடியோக்கள்

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை

பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு தொடக்கம்! | #Ajith | #EPS | #Seeman |
தினமணி செய்திச் சேவை

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை


