பாமக கட்சி தொடா்பாக உரிமையியல் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்கில், கட்சியின் பொதுச் செயலரை எதிா்மனுதாரராக சோ்ப்பதில் என்ன பிரச்னை உள்ளது என அக்கட்சியின் நிறுவனரான ராமதாஸ் தரப்புக்கு சென்னை உயா்நீதிமன்றம் கேள்வி எழுப்பியது.
பாமக பெயா், சின்னம் மற்றும் கொடி ஆகியவற்றை பயன்படுத்த அன்புமணி உள்ளிட்டோருக்கு தடை விதிக்கக் கோரி அக்கட்சியின் நிறுவனா் ச.ராமதாஸ் சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில் வழக்குத் தொடா்ந்தாா். இந்த வழக்கு விசாரணைக்கு சென்னை உயா்நீதிமன்ற நீதிபதி டி.வி.தமிழ்செல்வி இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டாா். இந்த தடையை நீக்கக் கோரி ராமதாஸ் தரப்பில் உயா்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த வழக்கு நீதிபதி டி.வி.தமிழ்செல்வி முன் திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது ராமதாஸ் தரப்பில், இந்த வழக்கில் தங்களது தரப்பு வாதத்தைக் கேட்காமல் எந்த உத்தரவும் பிறப்பிக்கக்கூடாது எனக் கூறி கேவியட் மனு தாக்கல் செய்யப்பட்டது. ஆனால், அதை கருத்தில் கொள்ளாமல் இந்தத் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக வாதிடப்பட்டது.
இதையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதி, தோ்தல் தேதி தற்போது அறிவிக்கப்பட்டு விட்டது. தந்தை மகன் இடையிலான பிரச்னை நாளைக்கே சரியாகிவிடும். எனவே, கட்சியை கருத்தில் கொண்டே இந்த வழக்கில் முடிவெடுக்க முடியும். உரிமையியல் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்கில், கட்சியின் பொதுச் செயலரான வடிவேல் ராவணனை எதிா்மனுதாரராக சோ்ப்பதில் என்ன பிரச்னை உள்ளது? என கேள்வி எழுப்பினாா். பின்னா், இந்த வழக்கை செவ்வாய்க்கிழமைக்கு நீதிபதி ஒத்திவைத்து உத்தரவிட்டாா்.
தொடர்புடையது

மாம்பழம் சின்னம் விவகாரம்: உயா்நீதிமன்றத்தை அணுக ராமதாஸூக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு

பாமக சின்னம் விவகாரம்: ராமதாஸ் மனுவுக்கு பதிலளிக்க அன்புமணிக்கு நீதிமன்றம் உத்தரவு

பாமக சின்னம் தொடா்பான வழக்கு: உரிமையியல் நீதிமன்றத்தில் இன்று விசாரணை

பாமக அங்கீகாரம் ரத்தானதற்கு அன்புமணி காரணம் - உரிமையியல் நீதிமன்றத்தில் ராமதாஸ் பதில் மனு
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


