15 ஆண்டுகளாக துரோகமிழைக்கும் திரிணமூல் காங்கிரஸ்: பிரதமர் மோடிதமிழ்நாடு பேரவைத் தேர்தல் 2026! வாக்குப்பதிவில் வரலாற்றுச் சாதனை!திமுகவை விடுவிக்க விதை விதைக்கப்பட்டுள்ளது: அன்புமணிதமிழ்நாட்டில் வாக்குப்பதிவு முடிந்தது!15 ஆண்டுகளாக துரோகமிழைக்கும் திரிணமூல் காங்கிரஸ்: பிரதமர் மோடி
/

உத்தரகண்ட் அனைத்து துறைகளிலும் முன்னேறும்: முதல்வர் தாமி

தனது பிறந்தநாளை முன்னிட்டு தப்கேஷ்வர் மகாதேவ் கோயிலில் வழிபாடு மேற்கொண்டார்.

News image

தப்கேஷ்வர் மகாதேவ் கோயிலில் முதல்வர் தாமி

Updated On :16 செப்டம்பர் 2024, 6:33 am

உத்தரகண்ட் முதல்வர் புஷ்கர் சிங் தாமி இன்று தனது பிறந்தநாளை முன்னிட்டு தப்கேஷ்வர் மகாதேவ் கோயிலில் வழிபாடு மேற்கொண்டார்.

செய்தியாளர்களிடம் பேசிய முதல்வர் தாமி,

மாநிலத்தில் பல்வேறு இயற்கை பேரிடர்களால் ஏற்பட்ட சேதங்களால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். பாதிக்கப்பட்ட மக்களை அணுகி அவர்களுக்கு அனைத்து வழிகளிலும் உதவுமாறு அனைவருக்கும் வேண்டுகோள் விடுத்துள்ளேன்.

பிரதமர் மோடி பேசிய புதிய உத்தர்கண்ட் பற்றி உண்மையானதாக மாற வேண்டும் என்று நான் விரும்புகிறேன். உத்தரகண்ட் அனைத்து துறைகளிலும் முன்னேறும் என்றும் முதல்வர் தாமி பிரதமர் மோடியைப் பாராட்டினார்.

முன்னதாக பிரதமர் மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, மத்திய அமைச்சர் நிதின் கட்கரி, உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத் ஆகியோர் முதல்வர் தாமிக்கு பிறந்தநாள் வாழ்த்துகளைத் தெரிவித்தனர்.

பிரதமர் மோடி வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில்,

மாநிலத்தை மாற்றுவதற்கான பல்வேறு முயற்சிகளில் முன்னணியில் இருக்கும் உத்தரகண்ட் முதல்வர் ஸ்ரீ புஷ்கர் சிங் தாமிக்கு நல்வாழ்த்துகள். நீண்ட ஆரோக்கியமாக வாழட்டும் என்று பதிவிட்டுள்ளார்.

பிரதமர் மோடிக்கு பதிலளித்த முதல்வர் தாமி,

ஆசீர்வாதங்களுக்கும் அன்பான வாழ்த்துகளுக்கும் என் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். உங்களின் திறமையான தலைமை மற்றும் வழிகாட்டுதலின் கீழ், நாங்கள் தொடர்ந்து அனைத்துத்துறை மற்றும் முழுமையான வளர்ச்சியை நோக்கி உழைத்து வருகிறோம். உங்களின் ஆசீர்வாதங்கள் எப்பொழுதும் வலுவான வளமான உத்தரகண்ட் என்ற இலக்கை அடைய உத்வேகம் அளிக்கும் வகையில் நாங்கள் அனைவரும் உறுதியாக இருக்கிறோம் என்று பதிவிட்டார்.

பிறந்தநாளை முன்னிட்டு முதல்வர் தாமி தப்கேஷ்வர் மகாதேவ் கோயிலில் தனது மனைவி கீதா தாமியுடன் வழிபாடு மேற்கொண்டார். கோயிலில் அவருக்கு சிறப்பான முறையில் வரவேற்பு அளிக்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.