ஹரியாணா சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி ஜனநாயக் ஜனதா கட்சி-ஆசாத் சமாஜ் கட்சி கூட்டணி 13 வேட்பாளர்கள் அடங்கிய ஆறாவது பட்டியலை வெளியிட்டுள்ளது.
90 உறுப்பினர்களைக் கொண்ட ஹரியாணா சட்டப்பேரவைத் தேர்தல் அக்டோபர் 5-ஆம் தேதி நடைபெற உள்ளது. ஆளும் பாஜக, முக்கிய எதிர்க்கட்சியான காங்கிரஸ், ஆம் ஆத்ம, ஜனநாயக ஜனநாயக் ஜனதா கட்சி-ஆசாத் சமாஜ் கட்சி, இந்திய தேசிய லோக் தளம் என பலமுனைப் போட்டி நிலவுகிறது.
இந்த நிலையில் ஹரியாணாவில் தேர்தல் கூட்டணி பேச்சுவார்த்தை தோல்வியடைந்ததையடுத்து, காங்கிரஸ், ஆம் ஆத்மி தனித்துப் போட்டியிடுகின்றன. இந்த நிலையில் தேர்தலில் களமிறங்கும் வேட்பாளர்களை அந்தந்த கட்சி வெளியிட்டு வருகின்றது.
அதன்படி, ஜனநாயக் ஜனதா கட்சி-ஆசாத் சமாஜ் கட்சி கூட்டணி 13 வேட்பாளர்களை அடங்கிய ஆறாவது பட்டியலை வெளியிட்டுள்ளது.
13 வேட்பாளர்களில் ஏஎஸ்பி பிவானி, பகதூர்கர், மகேந்திரகர் மற்றும் பாட்ஷாபூர் ஆகிய இடங்களில் போட்டியிடும். சோனிபட்டில் உள்ள கர்கோடா பகுதியைத் தவிர, ஜேஜேபி கர்னால், பானிபட் அர்பன், நர்வானா, உக்லானா, நர்னாண்ட், லோஹாரு, நங்கல் சௌத்ரி மற்றும் பத்கல் ஆகிய இடங்களிலிருந்தும் வேட்பாளர்களை நிறுத்தியுள்ளது.
இரு கூட்டணிக் கட்சிகளும் இதுவரை 90 இடங்களில் 77 இடங்களில் வேட்பாளர்களை அறிவித்துள்ளன. இந்த வேட்பாளர்களில் 61 பேர் ஜேஜேபியைச் சேர்ந்தவர்கள். வேட்புமனு தாக்கல் செய்ய இன்று கடைசி நாளாகும்.
முன்னதாக நேற்று கூட்டணி 34 வேட்பாளர்களின் பெயர்களைத் தேர்தலுக்கு அறிவித்தது குறிப்பிடத்தக்கது. செப்டம்பர் 4 அன்று, 19 வேட்பாளர்களின் முதல் பட்டியலை வெளியிட்டது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

மகளிர் இடஒதுக்கீடு விவகாரத்தில் போராட்டங்கள் வேண்டாம்: மாயாவதி

மக்கள் பிரச்னைகளுக்கு செவிசாய்க்காதவர் மோடி : கார்கே விமர்சனம்

காங்கிரஸ் வேட்பாளர் தேர்வில் அதிருப்தி? தேர்தல் பொறுப்பிலிருந்து விலகினார் மாணிக்கம் தாகூர்!

தேர்தல் 1977: எம்.ஜி.ஆர். சகாப்தம் தொடக்கம்!
வீடியோக்கள்

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை

பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு தொடக்கம்! | #Ajith | #EPS | #Seeman |
தினமணி செய்திச் சேவை

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை


