தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் களம் சூடுபிடித்திருந்தாலும், காங்கிரஸ் கட்சி இன்னமும் வேட்பாளர்களை அறிவிக்காத நிலையில், தேர்தல் பொறுப்புகளிலிருந்து மாணிக்கம் தாகூர் விலகியிருக்கிறார்.
தமிழ்நாடு தேர்தல் மேலாண்மைக் குழுவிலிருந்து விலகுவதாக, காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவுக்கு மாணிக்கம் தாகூர் கடிதம் எழுதியிருக்கிறார்.
திமுக தலைமையிலான கூட்டணிக் கட்சிகள், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட தொகுதிகளில் வேட்பாளர்களை அறிவித்து, பல கட்சி வேட்பாளர்கள் வேட்பு மனு தாக்கல் செய்து வரும் நிலையில், காங்கிரஸ் இன்னமும் வேட்பாளர்களை அறிவிக்கவில்லை.
காங்கிரஸ் வேட்பாளர் தேர்வில் தொடரும் இழுபறி பேசுபொருளாகிவரும் நிலையில், தமிழ்நாடு தேர்தல் பொறுப்புகளிலிருந்து விலகுவதாக, காங்கிரஸ் கட்சியின் தலைமைக்கு மாணிக்கம் தாகூர் கடிதம் எழுதியிருப்பது பரபரப்பை அதிகரித்துள்ளது.
தேர்தல் பிரசாரத்துக்காக துறையூர் சென்ற தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின், அங்கு காங்கிரஸ் வேட்பாளர் அறிவிக்கப்படாததால், கை சின்னத்துக்கு வாக்களிக்குமாறு பிரசாரம் செய்திருந்ததும் குறிப்பிடத்தக்கது.
தமிழகத்தில், திமுகவுடன் கூட்டணி அமைத்துப் போட்டியிடும் காங்கிரஸ் கட்சிக்கு 28 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ள நிலையில், வேட்பாளர்கள் தேர்வு செய்வதில் கட்சித் தலைவர்கள் ஈடுபட்டிருந்தனர். இதனிடையே, காங்கிரஸ் கட்சிக்குள் சிலர், தங்கள் பிரிவினருக்கு வாய்ப்புக் கொடுக்கக் கோரி போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.
வேட்பாளர் தேர்வு குறித்து ஏற்கனவே சலசலப்பு ஏற்பட்டு வந்த நிலையில், ஒருங்கிணைப்புக் குழு தலைவர் பொறுப்பிலிருந்து விலகியிருக்கிறார் மாணிக்கம் தாகூர்.
காங்கிரஸ் வேட்பாளர்களை தேர்வு செய்வதில் குழப்பம் நீடிக்கும் நிலையில் மாணிக்கம் தாகூரின் விலகர் புதிய சிக்கலை ஏற்படுத்தியிருப்பதாகக் கூறப்படுகிறது.
ஏற்கனவே, திமுகவுடன் கூட்டணி அமைத்தால், ஆட்சி, அதிகாரத்தில் பங்கு என்ற கோரிக்கையை மாணிக்கம் தாகூர் முன் வைத்து, பிறகு கட்சித் தலைமையின் அறிவுறுத்தலின்படி கைவிட்ட நிலையில், திமுக - காங்கிரஸ் இடையே தொகுதிப் பங்கீடு இறுதி செய்யப்பட்டு 28 தொகுதிகள் ஒதுக்கப்பட்டன.
இது குறித்து பேசிய மாணிக்கம் தாகூர், தலைமை எடுக்கும் முடிவுகள் எப்போதும் நம் விருப்பத்துக்கேற்ப இல்லாவிட்டாலும், ஒழுக்கத்துடன் நம்பிக்கையுடனும் அதை ஏற்றுக்கொள்வதே உண்மையான கடமை. ஏனென்றால் ஒற்றுமையே நமது மிகப்பெரிய பலம் என்று பதிவிட்டிருந்தார்.
Manickam Thakur resigns from election duties as Congress candidate selection drags on!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

மக்கள் பிரச்னைகளுக்கு செவிசாய்க்காதவர் மோடி : கார்கே விமர்சனம்

பாஜகவுடன் ஸ்டாலின், காங்கிரஸுக்கு மறைமுக உடன்பாடு: மமதாவின் கருத்துக்கு மாணிக்கம் தாகூர் கண்டனம்!
உள்கட்சி விவகாரத்தை விட்டு, தலைமை தேர்வு செய்த வேட்பாளர்களை ஏற்றுக்கொள்க: மாணிக்கம் தாகூர்!

காங்கிரஸ் தேர்தல் பொறுப்பில் இருந்து விலகியது ஏன்? மாணிக்கம் தாகூர் விளக்கம்!
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை



