கொல்கத்தாவில் பெண் மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்ட வழக்கு விசாரணையில், மேற்கு வங்க சுகாதாரத் துறை உச்ச நீதிமன்றத்தில் அறிக்கை இன்று சமர்ப்பித்தது.
பாலியல் கொலை வழக்கு உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளது.
அப்போது, மேற்கு வங்க மாநில சுகாதாரத் துறை சார்பில் உச்ச நீதிமன்றத்தில் இன்று அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது, அந்த அறிக்கையில், பெண் மருத்துவர் கொலையைக் கண்டித்து, மருத்துவர்கள் மேற்கொண்டு வரும் போராட்டம் காரணமாக இதுவரை 23 நோயாளிகள் பலியாகியிருக்கிறார்கள் என்று மாநில அரசு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் ஆஜரான மூத்த வழக்குரைஞர் கபில் சிபல் தாக்கல் செய்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விசாரணை நிலையை அறிய சிபிஐ மற்றும் மாநில அரசு அறிக்கை தாக்கல் செய்ய உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
மேற்கு வங்க மாநிலம், கொல்கத்தாவில் உள்ள ஆர்.ஜி.கர் அரசு மருத்துவக் கல்லூரி, மருத்துவமனையில் முதுநிலை பெண் பயிற்சி மருத்துவா், ஆகஸ்ட் மாதம் பாலியல் வன்கொடுமை செய்து கொல்லப்பட்டாா். இந்த சம்பவத்தில், காவல் துறைக்கு உதவும் தன்னாா்வலராகப் பணியாற்றி வந்த சஞ்சய் ராய் என்பவா் கைது செய்யப்பட்டு அவரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது. கொல்கத்தா உயா்நீதிமன்ற உத்தரவையடுத்து, இந்த வழக்கை சிபிஐ விசாரித்து வருகிறது.
இந்த நிலையில், மேற்கு வங்கத்தில் மருத்துவர் கொலை வழக்கை உச்ச நீதிமன்றம் தாமாக முன் வந்த விசாரணைக்கு எடுத்துள்ளது. நீதிபதிகள் ஜே.பி. பர்திவாலா, மனோஜ் மிஸ்ரா ஆகியோரை உள்ளடக்கிய உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி டி. ஒய். சந்திரசூட் தலைமையிலான அமர்வு முன், பெண் மருத்துவர் கொலை வழக்கு விசாரணை இன்று நடைபெறுகிறது.
முன்னதாக கடந்த மாதம் 22-ஆம் தேதி நடைபெற்ற வழக்கு விசாரணையின்போது, மருத்துவர் கொலை வழக்கில், முதல் தகவல் அறிக்கை பதிவு செய்வதில் மெத்தனப் போக்குடன் செயல்பட்டதாக கொல்கத்தா காவல்துறையின்மீது உச்சநீதிமன்றம் கடும் அதிருப்தியை வெளிப்படுத்தியிருந்தது. மேலும், நாடு முழுவதும் போராட்டத்தை முன்னெடுத்திருந்த மருத்துவர்கள் பணிக்கு திரும்பவும் நீதிமன்றம் கேட்டுக்கொண்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

மேற்கு வங்க அரசுக்கும் தோ்தல் ஆணையத்துக்கும் இடையே நம்பிக்கையின்மை: உச்சநீதிமன்றம்
எனக்கு எதிராக மத்திய அரசும், 19 மாநில அரசுகளும் களத்தில் உள்ளன: மம்தா பிரசாரம்

மேற்கு வங்க வாக்காளா் பட்டியல்: தோ்தல் ஆணைய முடிவுக்கு எதிராக மனு உச்ச நீதிமன்றத்தில் 13-ஆம் தேதி விசாரணை

மேற்கு வங்க முதல் கட்டத் தேர்தல்: வேட்புமனு தாக்கல் தொடங்கியது!
வீடியோக்கள்

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | போர்: பண்டியாவின் மும்பையா ருதுராஜின் சென்னையா? | MI vs CSK | MS Dhoni | Rohit Sharma |
தினமணி செய்திச் சேவை

வாக்குச்சாவடிகளை அடையாளம் காண புதிய முயற்சி | TN Election 2026 | Madurai | Polling booth
தினமணி செய்திச் சேவை

பணப்பட்டுவாடா புகார்களுக்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள்! அர்ச்சனா பட்நாயக் பேட்டி
இணையதளச் செய்திப் பிரிவு



