தமிழக தேர்தல்: பிற்பகல் 1 மணி வரை 56.81% வாக்குப்பதிவு! எதிர்கட்சிகளின் மாற்றம் முழக்கம் வாக்கு எண்ணிக்கை முடிந்த பிறகே தெரியும்: அமைச்சர் துரைமுருகன் திமுக ஊடக ஒருங்கிணைப்பு அறையை பார்வையிட்டார் முதல்வர் ஸ்டாலின்!கோடை வெப்பம் காரணமா? 4 மணி நேரத்தில் 2 கோடி பேருக்கு மேல் வாக்களிப்பு!அனைவரும் வாக்களிக்க வேண்டும்: வாக்களித்த பின் ரஜினிகாந்த் வேண்டுகோள்!தமிழ்நாடு வெல்லும்: வாக்களித்த பின் முதல்வர் ஸ்டாலின்கோவை வாக்குச்சாவடியில் பாரம்பரிய உடையில் வாக்காளர்களை வரவேற்ற 'டினா' ரோபோ!அமைச்சர் அன்பில் மகேஸ் வாக்களித்தார்!மேற்கு வங்கத்தில் முதல் கட்டத் தேர்தல்! விறுவிறுப்பான வாக்குப்பதிவு
/

ஹரியாணாவில் பள்ளி பேருந்து கவிழ்ந்து விபத்து: 45 மாணவர்களின் நிலை?

பஞ்ச்குலா மாவட்டத்தில் 45 மாணவர்களுடன் சென்ற பள்ளி பேருந்து பள்ளத்தாக்கில் கவிழ்ந்தது.

News image

பேருந்து விபத்து

Updated On :19 அக்டோபர் 2024, 9:53 am

ஹரியாணா மாநிலம், பஞ்ச்குலா மாவட்டத்தில் 45 மாணவர்களுடன் சென்ற பேருந்து பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

பஞ்ச்குலா மாவட்டத்தில் 45 மாணவர்களுடன் சென்ற பள்ளி பேருந்து பள்ளத்தாக்கில் கவிழ்ந்தது. இந்த விபத்தில் முதற்கட்ட தகவலின்படி, மூன்று பேர் காயமடைந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

பேருந்து ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து மோர்னியில் உள்ள திக்கர் தால் அருகே உள்ள பள்ளத்தாக்கில் உருண்டு விழுந்துள்ளது. இந்த விபத்தில் பேருந்து ஓட்டுநர் மற்றும் இரண்டு மாணவர்கள் காயமடைந்ததாகவும் போலீஸார் தெரிவித்தனர்.

பேருந்தில் இருந்த மீதமுள்ள மாணவர்கள் மீட்கப்பட்டு பஞ்சகுலா செக்டார்-6 மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டதாக போலீஸார் தெரிவித்தனர்.

விபத்து நடைபெற்ற இடத்தில் மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றது. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள மாணவர்களின் நிலைமை சீராக இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. மேலும் தகவல்கள் இன்னும் வெளியாகவில்லை.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.