தமிழக தேர்தல்: பிற்பகல் 1 மணி வரை 56.81% வாக்குப்பதிவு! எதிர்கட்சிகளின் மாற்றம் முழக்கம் வாக்கு எண்ணிக்கை முடிந்த பிறகே தெரியும்: அமைச்சர் துரைமுருகன் திமுக ஊடக ஒருங்கிணைப்பு அறையை பார்வையிட்டார் முதல்வர் ஸ்டாலின்!கோடை வெப்பம் காரணமா? 4 மணி நேரத்தில் 2 கோடி பேருக்கு மேல் வாக்களிப்பு!அனைவரும் வாக்களிக்க வேண்டும்: வாக்களித்த பின் ரஜினிகாந்த் வேண்டுகோள்!தமிழ்நாடு வெல்லும்: வாக்களித்த பின் முதல்வர் ஸ்டாலின்கோவை வாக்குச்சாவடியில் பாரம்பரிய உடையில் வாக்காளர்களை வரவேற்ற 'டினா' ரோபோ!அமைச்சர் அன்பில் மகேஸ் வாக்களித்தார்!மேற்கு வங்கத்தில் முதல் கட்டத் தேர்தல்! விறுவிறுப்பான வாக்குப்பதிவு
/

தில்லியில் மோசமான காற்று மாசுக்கு பாஜக, ஆம் ஆத்மி கட்சிகளே காரணம்!

காற்றின் மாசு உச்சத்தில் இருக்கும்போதும் நடவடிக்கை எடுக்கத் தவறிய மத்திய அரசு..

News image

தில்லியில் அதிகரிககும் காற்று மாசு

Updated On :19 அக்டோபர் 2024, 7:45 am

தேசிய தலைநகரில் மோசமான காற்று மாசுக்கு பாஜக தலைமையிலான மத்திய அரசு மற்றும் தில்லியில் ஆம் ஆத்மி அரசு ஆகிய இரு கட்சிகளும் காரணம் என்று காங்கிரஸ் தலைவர் பிரமோத் திவாரி விமர்சித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் கூறியது,

யமுனா நதி நீரைக் குடிநீராக மாற்றுவதாக வாக்குறுதி அளிக்கப்பட்டது, ஆனால் தற்போது குளிப்பதற்கும் ஏற்றதாக இல்லை. அரவிந்த் கேஜரிவால் முன்னதாக பெரிய வாக்குறுதிகளை அளித்ததாகவும், ஆனால் அவற்றைச் செயல்படுத்த தவறியதாகவும் அவர் குற்றம் சாட்டினார்.

காற்றின் மாசு அளவு உச்சத்தில் இருக்கும்போதும் நடவடிக்கை எடுக்கத் தவறிய மத்திய அரசு தேவையற்ற விஷயங்களில் தலையிடுகிறது. துணைநிலை ஆளுநரும் அமைதியாக இருக்கிறார்.

உலகெங்கிலும் உள்ள பிற தலைநகரங்களில் காற்றின் மாசுவைக் கட்டுப்படுத்தியுள்ளனர். ஆனால் தில்லியில் கட்டுப்படுத்த முடியவில்லை என்பதெல்லாம் கட்சிகள் சாக்குப்போக்கு சொல்லிவருவதெல்லாம் ஏற்றுக்கொள்ள முடியாதது என்று அவர் கூறியுள்ளார்.

தலைநகரில் குளிர்காலம் தொடங்கியது முதலே காற்று மாசு அதிகரித்துக் காணப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் காற்றின் தரம் மோசமடையும். கடந்த சில நாள்களாக காற்று மாசு அதிகரித்து வருகிறது.

மத்திய மாசுக் கட்டுப்பாடு வாரியத்தின் தரவுகளின்படி, கடந்த 24 மணி நேரத்தில் தில்லியில் காற்று தரக் குறியீடு(AQI) 293 ஆகப் பதிவாகியுள்ளது. காற்றின் தரம் மோசமான பிரிவில் இருந்ததால் தில்லியில் இன்று காலை புகை மூட்டமாகக் காணப்பட்டது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.