ஆம் ஆத்மி கட்சித் தலைவர் அரவிந்த் கேஜரிவால் சிறையிலிருந்தபோது பாஜகவால் நிறுத்தப்பட்ட சாலை சீரமைப்பு உள்ளிட்ட பல்வேறு பணிகளை ஆம் ஆத்மி அரசு மீண்டும் தொடங்கும் என்று தில்லி முதல்வர் அதிஷி திங்கள்கிழமை தெரிவித்தார்.
இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அதிஷி கூறியது..
அடுத்தாண்டு தொடக்கத்தில் நடைபெறவிருக்கும் சட்டப்பேரவைத் தேர்தலுக்கு முன் தன அரசு பழுதடைந்த சாலைகளை சீரமைக்கத் தொடங்கும் என்று தெரிவித்தார்.
சேதடைந்த சாலைகள் பொதுப்பணித்துறை அடையாளம் கண்டுள்ளதாகவும், இந்த பணிகளுக்காக ஏற்கனவே 74 டெண்டர்கள் விடப்பட்டுள்ளது.
ஆம் ஆத்மி தலைவர்கள் தொடர் ஆய்வு செய்ததில் மொத்தம் 6,671 பள்ளங்கள் உள்ள சாலைகளை அடையாளம் காணப்பட்டதாகவும், 3,454 சாலைகள் இதுவரை சீர்ப்படுத்தப்பட்டதாகவும் அவர் கூறினார்
செய்தியாளர் சந்திப்பில் கேஜரிவால் கூறியது,,
நான் சிறையில் இருந்தபோது, பாஜக தில்லி அரசின் பல்வேறு பணிகளை முடக்கினர்.
நான் திரும்பிய பிறகு, நானும் அதிஷியும் சாலைகளை ஆய்வு செய்தோம், சாலைகளின் நிலை மிகவும் பழுதடைந்துள்ளது தெரியவந்தது. சாலைகளை உடனே சீரமைக்க வேண்டும் என்று முதல்வர் அதிஷிக்கு நான் கடிதம் எழுதியுள்ளேன்.
சீரமைப்புப் பணிகள் குறித்த விவரங்களை அளித்த அதிஷி, சேதமடைந்த 89 முக்கிய சாலைகளை முதல்கட்டமாக சீரமைக்க பொதுப்பணித்துறையிடம் தகவல் தெரிவித்துள்ளோம் என்று அவர் கூறினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

திமுகவுக்கு ஆதரவாக அரவிந்த் கேஜரிவால் பிரசாரம்! ஏப்.20 தமிழகம் வருகிறார்!!

ராகவ் சத்தாவை நீக்குவது உள்கட்சி விவகாரம், ஆனால் அவா் பேசுவதை தடுப்பது தவறு: பாஜக
என்ன குற்றம் செய்தேன்? நடவடிக்கை ஏன்? ஆம் ஆத்மிக்கு ராகவ் சத்தா கேள்வி!

ஆம் ஆத்மி எம்.எல்.ஏ-க்களின் இடை நீக்கத்தை ரத்து செய்யாவிடில் பட்ஜெட் கூட்டத் தொடரில் பங்கேற்கமாட்டோம்: அதிஷி
வீடியோக்கள்

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | போர்: பண்டியாவின் மும்பையா ருதுராஜின் சென்னையா? | MI vs CSK | MS Dhoni | Rohit Sharma |
தினமணி செய்திச் சேவை

வாக்குச்சாவடிகளை அடையாளம் காண புதிய முயற்சி | TN Election 2026 | Madurai | Polling booth
தினமணி செய்திச் சேவை

பணப்பட்டுவாடா புகார்களுக்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள்! அர்ச்சனா பட்நாயக் பேட்டி
இணையதளச் செய்திப் பிரிவு


