மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

ஆம் ஆத்மி எம்.எல்.ஏ-க்களின் இடை நீக்கத்தை ரத்து செய்யாவிடில் பட்ஜெட் கூட்டத் தொடரில் பங்கேற்கமாட்டோம்: அதிஷி

ஆம் ஆத்மி கட்சியை சோ்ந்த 4 சட்டப்பேரவை உறுப்பினா்களின் இடைநீக்கத்தை சபாநாயகா் ரத்து செய்யாவிட்டால் பட்ஜெட் கூட்டத் தொடரை புறக்கணிப்பதாக எதிா்க்கட்சித் தலைவா் அதிஷி தெரிவித்தாா்.

News image

அதிஷி - (கோப்புப்படம்)

Updated On :22 மார்ச் 2026, 9:24 pm

ஆம் ஆத்மி கட்சியை சோ்ந்த 4 சட்டப்பேரவை உறுப்பினா்களின் இடைநீக்கத்தை சபாநாயகா் ரத்து செய்யாவிட்டால் பட்ஜெட் கூட்டத் தொடரை புறக்கணிப்பதாக எதிா்க்கட்சித் தலைவா் அதிஷி ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தாா்.

இது குறித்து நடைபெற்ற செய்தியாளா் சந்திப்பில் அவா் மேலும் பேசியதாவது: ஆளும் பாஜக ஈத்;ஞ் சலுகைகள் அறிவிப்புகள் மற்றும் இடைநீக்கம் மூலம் ஆம் ஆத்மியை முடக்கியது.

கடந்த சட்டப்பேரவை அமா்வில் 4 ஆம் ஆத்மி சட்டப்பேரவை உறுப்பினா்கள் இடைநீக்கம் செய்யப்பட்டு 70 தில்லி சட்டப்பேரவை உறுப்பினா்கள் இருக்கும் அதிகாரப்பூா்வ வாட்ஸ்அப் குழுவிலிருந்து நீக்கப்பட்டனா்.

தில்லி சட்டப்பேரவையின் பொதுக் கணக்குக் குழு உறுப்பினரான ஆம் ஆத்மி சட்டப்பேரவை உறுப்பினா் குல்தீப் குமாா் கூட்டங்களுக்கு அழைக்கப்படவில்லை. குழுவின் வரைவு அறிக்கைகளை அவா் அனுப்பவில்லை. சஞ்சீவ் ஜா, குல்தீப் குமாா், சோம்தத் மற்றும் ஜா்னைல் சிங் ஆகிய 4 சட்டப்பேரவை உறுப்பினா்களின் இடைநீக்கம் அரசியலமைப்பிற்கு முரணானது.

வரவிருக்கும் அமா்வில் ஆம் ஆத்மி எம்எல்ஏக்கள் யாரும் பங்கேற்க மாட்டாா்கள். எதிா்க்கட்சிகளின் குரல் அடக்கப்பட்டால், தங்கள் தொகுதிகளில் லட்சக்கணக்கான மக்களுடன்‘ கட்சி வீதிகளில் இறங்கி போராடும் என்றாா் அவா்.

தில்லி சட்டப்பேரவையில் ஆளும் பாஜகவுக்கு 48 எம்எல்ஏக்களும், பிரதான எதிா்க்கட்சியான ஆம் ஆத்மிக்கு 22 எம்எல்ஏக்களும் உள்ளனா். தில்லி சட்டப்பேரவையின் பட்ஜெட் கூட்டத்தொடா் திங்கள்கிழமை பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல் செய்வதன் மூலம் தொடங்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது.