ஒடிசாவில் அகில இந்திய டிஜிபி/ஐஜிபி மாநாட்டில் பங்கேற்பதற்காகப் பிரதமர் மோடியும், மத்திய அமைச்சர் அமித் ஷாவும் வெள்ளிக்கிழமை புறப்பட்டுச் சென்றனர்.
ஒடிசாவில் டிஜிபி, ஐஜிபிக்கள் மாநாடு இன்று தொடங்குகின்றது. இந்த மாநாடு தொடர்ந்து மூன்று நாள்கள் நடைபெற உள்ளது. இந்த மாநாட்டில் பங்கேற்கப் பிரதமர் மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா மற்றும் முக்கிய பிரமுகர்கள் கலந்துகொள்கின்றனர்.
அமித் ஷா முன்னதாக ஒடிசா மாநிலத் தலைநகருக்கு வருவார் என்று தகவல் வெளியாகியுள்ள நிலையில், பிரதமர் மோடி பிஜு பட்நாயக் சர்வதேச விமான நிலையத்தை மாலை 4.20 மணியளவில் சென்றடைவார் என்று அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகியுள்ளது.
நிகழ்ச்சிக்காகச் செய்யப்பட்ட போக்குவரத்து ஏற்பாடுகளைக் கருத்தில் கொண்டு, மாநில அரசு வெள்ளிக்கிழமை மதியம் 1 மணிக்கு மேல் புவனேஸ்வர் முனிசிபல் கார்ப்பரேஷன் அதிகார வரம்பில் உள்ள அனைத்து பள்ளிகளையும் மூடுவதாக அறிவித்துள்ளது.
பிரதமர் மோடி மாலை 4.20 மணிக்கு புவனேஸ்வரில் உள்ள பிஜு பட்நாயக் சர்வதேச விமான நிலையத்திற்கு வந்து, விமான நிலையத்தில் நடைபெறும் பாராட்டு நிகழ்ச்சியில் அவர் கலந்துகொள்ள உள்ளார். பின்னர் மாலை 5 மணிக்கு ஆளுநர் மாளிகைக்கு செல்கிறார் மோடி.
மாலை 6 மணி முதல் இரவு 8.30 மணி வரை பாஜக அலுவலகத்தில் அவர் தலைமையில் கட்சி கூட்டம் நடைபெற உள்ளது. பின்னர் மீண்டும் ஆளுநர் மாளிகையில் இரவு தங்கவுள்ளார்.
ஒடிசாவில் முதன்முறையாக நடைபெறும் அகில இந்திய டிஜிபி/ஐஜிபி மாநாட்டிற்காக சனிக்கிழமை காலை 8.30 மணிக்கு மாநிலச் செயலக லோக் சேவா பவனுக்கு பிரதமர் வருகைதர உள்ளார். நிகழ்ச்சிகளை முவுத்துவிட்டு மறுநாள் புது தில்லி புறப்படுகிறார்.
மக்களவைத் தேர்தலுக்குப் பிறகு பிரதமர் மோடி மூன்றாவது முறையாக ஒடிசா மாநிலத்துக்குச் செல்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தொகுதி மறுவரையறை, மகளிர் இடஒதுக்கீடு! நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி 3 மணிக்கு உரை!

நொய்டாவில் சர்வதேச விமான நிலையம்: பிரதமர் மோடி திறந்து வைத்தார்!

3 முறை குஜராத் முதல்வர்! 3 முறை பிரதமர்! மோடிக்கு அமித் ஷா புகழாரம்

இன்று மதுரை வருகிறாா் பிரதமர் மோடி!
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


