கரூர் விஷயத்தில் என் மீது ஏன் பழி போட்டீர்கள்? - முதல்வருக்கு விஜய் கேள்விவிஜய் கொடுத்த வாக்குறுதி; எனக்கும் ஸ்டாலினுக்கும் நடக்கிற போர் இது! - விஜய் பேச்சு தனிச்சின்னத்தில் போட்டி: தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தைக்குப் பிறகு மதிமுக அறிவிப்பு சென்னை புறநகர் ரயில்கள் ரத்து! ரயில் நிலையங்களில் அசாதாரண சூழல்! மேற்கு வங்க அரசியல் சாணக்கியர் முகுல் ராய் காலமானார்!திருவப்பூர் முத்துமாரியம்மன் கோயில் பூச்சொரிதல் விழா வாக்காளர் இறுதிப் பட்டியல்! சென்னையில் 28.30 லட்சம் பேர்!
/

ஏழாம் கட்டத் தேர்தலில் 904 வேட்பாளர்கள்

News image
Updated On :22 மே 2024, 9:38 pm

 நமது நிருபர்

நாட்டின் 18-ஆவது மக்களவைத் தேர்தலுக்கான ஏழாம் கட்டத் தேர்தலில் 904 வேட்பாளர்கள் போட்டியிடுவதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

கடந்த மாதம் 19-ஆம் தேதி தொடங்கி 7 கட்டங்களாக மக்களவைத் தேர்தல் வாக்குப் பதிவு நடைபெற்று வருகிறது. 5 கட்ட தேர்தல்கள் முடிவடைந்துள்ளநிலையில், 6-ஆம் கட்டத் தேர்தல் மே 25-ஆம் தேதி 6 மாநிலங்கள், 2 யூனியன் பிரதேங்களில் 58 தொகுதிகளுக்கு நடைபெறவுள்ளது.

இந்நிலையில், ஜூன் 1-ஆம் தேதி நடைபெறும் 7-ஆம் கட்டத் தேர்தலில் 8 மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில் உள்ள 57 தொகுதிகளில் போட்டியிட மொத்தம் 2,105 வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன என்றும் இதில் 904 வேட்பாளர்கள் இறுதியாக போட்டியிடுகின்றனர் என்றும் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. பிகார், ஹிமாசல பிரதேசம், ஜார்க்கண்ட், ஒடிஸô, பஞ்சாப், உத்தர பிரதேசம், மேற்கு வங்கம், சண்டீகரில் ஏழாம் கட்டத் தேர்தல் நடைபெற உள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.