15 ஆண்டுகளாக துரோகமிழைக்கும் திரிணமூல் காங்கிரஸ்: பிரதமர் மோடிதமிழ்நாடு பேரவைத் தேர்தல் 2026! வாக்குப்பதிவில் வரலாற்றுச் சாதனை!திமுகவை விடுவிக்க விதை விதைக்கப்பட்டுள்ளது: அன்புமணிதமிழ்நாட்டில் வாக்குப்பதிவு முடிந்தது!15 ஆண்டுகளாக துரோகமிழைக்கும் திரிணமூல் காங்கிரஸ்: பிரதமர் மோடி
/

விடியோ பதிவை நீக்குக: சுனிதா கேஜரிவாலுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு!

கேஜரிவால் மனைவி சுனிதாவுக்கு உயர்நீதிமன்றம் விதித்த அதிரடி..

News image

தில்லி முதல்வர் மனைவி சுனிதா கேஜரிவால்

Updated On :15 ஜூன் 2024, 8:59 am

கலால் கொள்கை முறைகேடு தொடர்பான வழக்கில் நீதிமன்றத்தில் முதல்வர் கேஜரிவால் பேசிய பதிவை சமூக ஊடகங்களில் வெளியிட்ட பதிவை உடனடியாக நீக்க வேண்டும் என சுனிதா கேஜரிவாலுக்கு தில்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தில்லி கலால் கொள்கை முறைகேடு தொடர்பான வழக்கில் முதல்வர் அரவிந்த் கேஜரிவால் கடந்த மார்ச் மாதம் கைது செய்யப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இதனிடையே அவர் நீதிமன்றத்தில் பேசும் விடியோ பதிவை அவரது மனைவி சுனிதா வெளியிட்டதில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இதுதொடர்பாக வழக்குரைஞர் வைபவ் சிங் தாக்கல் செய்த மனு இன்று விசாரணைக்கு வந்தது. அந்த மனுவில், நீதிமன்றத்தில் வழக்கு தொடர்பாக கேஜரிவால் பேசிய விடியோ பதிவு சமூக வலைத்தளத்தில் வெளியிடப்பட்டுள்ளதாகக் குற்றம் சாட்டினார்.

இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் நீனா பன்சால், கிருஷ்ணா ஆகியோர் அடங்கிய அமர்வு சமூக ஊடகங்களில் வெளியிட்ட பதிவை உடனடியாக நீக்குவதுடன் இதுதொடர்பாக சுனிதா கேஜரிவால் விளக்கம் அளிக்க வேண்டும் என்று நோட்டீஸ் அனுப்பியுள்ளது. மேலும் இந்த விடியோவை மறுபதிவேற்றம் செய்தால் சமூக ஊடகங்கள் அதை உடனடியாக நீக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டனர்.

இந்த வழக்கு விசாரணையை ஜூலை 9-ம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.