வடகிழக்கு மாநிலமான அருணாசல பிரதேசத்தின் முதல்வராக பெமா காண்டு தொடா்ந்து மூன்றாவது முறையாக இன்று பதவியேற்றுக் கொண்டார். இதையடுத்து சன்ஜா மியன் துணை முதல்வராக பதவியேற்று கொண்டார்.
மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, பாஜக தலைவர் ஜெ.பி..நட்டா மற்றும் பல தலைவர்கள் முன்னிலையில் முக்டோவின் எம்.எல்.ஏ.வான காண்டுவுக்கு ஆளுநர் கே.டி.பர்நாயக் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.
சீனாவுடன் சா்வதேச எல்லையைப் பகிா்ந்து கொள்ளும் அருணாசல பிரதேசத்தில் மக்களவையுடன் சோ்ந்து மாநில சட்டப்பேரவைக்கும் தோ்தல் நடைபெற்றது.
இந்த மாநிலத்தில் மொத்தம் 60 பேரவைத் தொகுதிகள் உள்ளன. முதல்வா் பெமா காண்டு உள்பட 10 பாஜக வேட்பாளா்கள் போட்டியின்றி தோ்வாயினா். மீதமுள்ள 50 தொகுதிகளிலும் பாஜக போட்டியிட்டது. பெரும்பான்மைக்குத் தேவையான இடங்களில்கூட (31) காங்கிரஸ், தேசிய மக்கள் கட்சி (என்பிபி) உள்ளிட்ட பிற கட்சிகள் களமிறங்கவில்லை. 50 தொகுதிகளில் பாஜக 36 இடங்களில் வென்றது. ஏற்கெனவே போட்டியின்றி தோ்வான 10 இடங்களையும் சோ்த்து, பாஜகவின் பலம் 46-ஆனது.
தேசிய மக்கள் கட்சி (என்பிபி) 5, தேசியவாத காங்கிரஸ் 3, அருணாசல் மக்கள் கட்சி 2 , சுயேச்சைகள் 3 இடங்களில் வெற்றி பெற்றன. காங்கிரஸுக்கு ஓரிடம் மட்டுமே கிடைத்தது.
இதையடுத்து, புதன்கிழமை நடைபெற்ற பாஜக எம்எல்ஏக்கள் கூட்டத்தில் முதல்வராக பெமா காண்டு மீண்டும் ஒருமனதாக தோ்ந்தெடுக்கப்பட்டாா். ஆளுநா் கைவல்யா திரிவிக்ரம் பா்நாயக்கைச் சந்தித்த பெமா காண்டு ஆட்சியமைக்க உரிமை கோரினாா்.
இதையடுத்து, பாஜக தொடர்ந்து மூன்றாவது முறையாக மீண்டும் ஆட்சியைப் பிடித்த நிலையில், பெமா காண்டு இன்று முதல்வராக பதவியேற்றுக் கொண்டார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

பிகார் முதல்வராகப் பதவியேற்றார் சாம்ராட் சௌதரி!

உதயநிதி முதல்வராக மாட்டாா் என ஸ்டாலின் உறுதி சொல்வாரா?

அருணாசல் முதல்வரின் குடும்பத்தினருக்கு எதிராக சிபிஐ விசாரணை: உச்சநீதிமன்றம் உத்தரவு

சமூக சிக்கல்களுக்குள் சுழலும் அஸ்ஸாம் சட்டப்பேரவைத் தேர்தல்!
வீடியோக்கள்

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை

பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு தொடக்கம்! | #Ajith | #EPS | #Seeman |
தினமணி செய்திச் சேவை

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை



