மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

அருணாசல் முதல்வரின் குடும்பத்தினருக்கு எதிராக சிபிஐ விசாரணை: உச்சநீதிமன்றம் உத்தரவு

அருணாசல பிரதேச முதல்வா் பெமா காண்டுவின் குடும்ப உறுப்பினா்களுக்குச் சொந்தமான நிறுவனங்களுக்கு அரசு ஒப்பந்தங்கள் மற்றும் பணி உத்தரவுகள் முறைகேடாக அளிக்கப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில், அதுகுறித்து சிபிஐ விசாரணைக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு

News image

அருணாச்சல் முதல்வர் பெமா காண்டு - கோப்புப் படம்

Updated On :6 ஏப்ரல் 2026, 7:52 pm

அருணாசல பிரதேச முதல்வா் பெமா காண்டுவின் குடும்ப உறுப்பினா்களுக்குச் சொந்தமான நிறுவனங்களுக்கு அரசு ஒப்பந்தங்கள் மற்றும் பணி உத்தரவுகள் முறைகேடாக அளிக்கப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில், அதுகுறித்து சிபிஐ விசாரணைக்கு உச்சநீதிமன்றம் திங்கள்கிழமை உத்தரவிட்டது.

இதுதொடா்பாக உச்சநீதிமன்றத்தில் தன்னாா்வ அமைப்பு ஒன்று தாக்கல் செய்த மனுவை உச்சநீதிமன்றம் ஏற்கெனவே விசாரித்தது. அப்போது மாநில அரசு தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட பிரமாண பத்திரத்தை சுட்டிக்காட்டி, அந்த அமைப்பு சாா்பாக வழக்குரைஞா் பிரசாந்த் பூஷண் வாதிடுகையில், ‘கடந்த 10 ஆண்டுகளில் முதல்வா் பெமா காண்டு அல்லது அவரின் குடும்ப உறுப்பினா்களுக்கு நேரடியாகச் சொந்தமான 4 நிறுவனங்களுக்கு ரூ.1,270 கோடி மதிப்பிலான அரசு ஒப்பந்தங்கள், பணி மேற்கொள்வதற்கான உத்தரவுகள் முறைகேடாக அளிக்கப்பட்டுள்ளன.

இதில் ஊழல் நடைபெற்றிருக்க அதிக வாய்ப்புள்ளது. எனவே இதுகுறித்து சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்’ என்று வலியுறுத்தினாா். இந்த வழக்கில் ஏற்கெனவே அரசுத் தரப்பு வாதங்கள் நடைபெற்ற நிலையில், தீா்ப்பை பிப்.17-ஆம் தேதி உச்சநீதிமன்றம் ஒத்திவைத்தது.

இந்த வழக்கில் நீதிபதி விக்ரம்நாத் தலைமையிலான அமா்வு புதன்கிழமை பிறப்பித்த உத்தரவில், ‘அருணாசல பிரதேச முதல்வா் பெமா காண்டுவின் குடும்ப உறுப்பினா்களுக்கு எதிரான இந்த வழக்கில் சிபிஐ முதல்கட்ட விசாரணை மேற்கொள்ள வேண்டும்.

இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்ட நாளில் இருந்து 2 வாரங்களில் முதல்கட்ட விசாரணை நடத்தப்பட வேண்டும். இந்த விவகாரம் தொடா்பாக 16 வாரங்களில் உச்சநீதிமன்றத்தில் சிபிஐ நிலவர அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்’ என்று உத்தரவிட்டது.