புது தில்லி: நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி தொடங்கி நடைபெற்று வரும் நிலையில், பெரும்பான்மைக்கு அதிகமான இடங்களில் பாஜக முன்னிலையில் உள்ளது.
நடைபெற்று முடிந்த மக்களவைத் தேர்தலில் 542 தொகுதிகளுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று காலை தொடங்கி நடைபெற்று வருகிறது. அதில், முன்னிலை நிலவரங்கள் வெளியாகி வரும் நிலையில், தேசிய ஜனநாயகக் கூட்டணி இதுவரை 238 தொகுதிகளுக்கும் அதிகமாக அதாவது பெரும்பான்மை இடங்களில் முன்னிலையிலும், ஒரு தொகுதியில் வெற்றி பெற்றுள்ளது.
தேர்தல் ஆணையத்தின் இணையதளத்தில் தற்போதைய நிலவரப்படி, பாஜக தலைமையிலான தேஜகூ 238 தொகுதிகளில் முன்னிலையில் உள்ளது.
இந்தியா கூட்டணி 230 தொகுதிகளில் முன்னிலையில் உள்ளது. இதில் அதன் கூட்டணி கட்சியான சமாஜ்வாதி 33 தொகுதிகளில் முன்னிலையில் உள்ளது. திரிணமூல் 29 தொகுதிகளில் முன்னிலையில் உள்ளது.
உத்தரப்பிரதேசத்தில் பாஜக 35 தொகுதிகளில் முன்னிலை வகிக்கிறது. கூட்டணியான ராஷ்ட்ரிய லோக் தளம் 2 தொகுதிகளில் முன்னிலையில் உள்ளது. சமாஜ்வாதி கட்சி 34 தொகுதிகளில் முன்னிலையில் உள்ளது.
2019ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணி 353 தொகுதிகளில் வென்றிருந்தது. இதில் பாஜக மட்டும் 303 தொகுதிகளில் வெற்றிபெற்றிருந்தது. எதிர்க்கட்சிக் கூட்டணி 93 தொகுதிகளிலும் காங்கிரஸ் 52 தொகுதிகளிலும் வெற்றிபெற்றிருந்தது.
இந்த மக்களவைத் தேர்தலில் சுமார் 64 கோடி மக்கள் வாக்களித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

234 தொகுதிகளிலும் இரட்டை இலை.. 230 தொகுதிகளில் உதயசூரியன்!
2 தொகுதிகளில் போட்டியிட்ட தலைவர்கள்!
தமாகா களம் கண்ட 5 சின்னங்கள்!

சொல்லப் போனால்... இலவு காக்கும் கிளிகள்?
வீடியோக்கள்

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | போர்: பண்டியாவின் மும்பையா ருதுராஜின் சென்னையா? | MI vs CSK | MS Dhoni | Rohit Sharma |
தினமணி செய்திச் சேவை

வாக்குச்சாவடிகளை அடையாளம் காண புதிய முயற்சி | TN Election 2026 | Madurai | Polling booth
தினமணி செய்திச் சேவை

பணப்பட்டுவாடா புகார்களுக்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள்! அர்ச்சனா பட்நாயக் பேட்டி
இணையதளச் செய்திப் பிரிவு



