1996-இல் மூப்பனரால் தொடங்கப்பட்ட தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி இதுவரை 5 சின்னங்களில் களம் கண்டுள்ளது.
கட்சி தொடங்கியபோது சந்தித்த மக்களவை, பேரவைத் தேர்தல்களில் தேர்தல் ஆணையம் வழங்கிய சைக்கிள் சின்னத்தை, தேர்தல் வெற்றிக்குப் பிறகு தனக்கான அங்கீகார சின்னமாக மாற்றிக் கொண்டது.
1996 தேர்தலில் 41 இடங்களில் போட்டியிட்ட தமாகா, 39 இடங்களில் வெற்றிபெற்றது. 1996 மக்களவைத் தேர்தலில் 20 இடங்களில் போட்டியிட்டு 20 இடங்களையும் வென்றது. மீண்டும் 1998 மக்களவைத் தேர்தலில் சைக்கிள் சின்னத்தில் 20 இடங்களில் போட்டியிட்டு 3 தொகுதிகளை கைப்பற்றியது.
1999 மக்களவைத் தேர்தலிலும் சைக்கிள் சின்னத்தில் போட்டியிட்டது. 2001-இல் சட்டப் பேரவைத் தேர்தலில் 32 தொகுதிகளில் சைக்கிள் சின்னத்தில் போட்டியிட்டு 23 இடங்களில் வென்றது.
மூப்பனார் மறைவுக்குப் பிறகு கட்சியின் தலைவர் பொறுப்பேற்ற ஜி.கே. வாசன், 2002-இல் கட்சியை காங்கிரஸýடன் இணைத்துவிட்டார். மீண்டும் 2014-இல் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியை தொடங்கிய ஜி.கே.வாசன், 2016 பேரவைத் தேர்தலில் மக்கள் நலக்கூட்டணியில் இடம்பெற்று தென்னந்தோப்பு சின்னத்தில் தமாகா களம் கண்டது.
2019 மக்களவைத் தேர்தலில் அதிமுக கூட்டணியில் இடம் பிடித்த தமாகா ஆட்டோ சின்னத்தில் போட்டியிட்டது. 2021 பேரவைத் தேர்தலில் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்டது. 2024 மக்களவைத் தேர்தலில் மீண்டும் சைக்கிள் சின்னம் கிடைத்து களம் கண்டது.
2026 பேரவைத் தேர்தலில் ஈரோடு மேற்கு, ராணிப்பேட்டை, கிள்ளியூர், ஒட்டன்சத்திரம், கும்பகோணம் என 5 தொகுதிகளில் தாமரை சின்னத்தில் போட்டியிடுகிறது.
இக்கட்சி இதுவரை சைக்கிள், தென்னந்தோப்பு, ஆட்டோ, இரட்டை இலை சின்னங்களில் போட்டியிட்டு, இப்போது 5-ஆவது சின்னமாக, தாமரையில் போட்டியிடுகிறது.
சின்னங்கள் மாறிக்கொண்டே இருந்தாலும் களப்பணி முக்கியம், கூட்டணியின் பலமும் முக்கியம். அதை உணர்ந்துதான் தாமரை சின்னத்தில் போட்டியிடுவதாகக் கூறியுள்ளார் ஜி.கே. வாசன். அதிமுக தமிழகத்தின் முதன்மையான கட்சி, பாஜக இந்தியாவின் முதன்மையான கட்சி இந்த 2 கட்சிகளுடனும் நாங்கள் கூட்டணியில் இருக்கும்போது, நல்ல அரசை அமைக்கக்கூடிய சின்னமாக நாங்கள் இந்தச் சின்னங்களை (இரட்டை இலை, தாமரை) கருதுகிறோம் எனவும் தெரிவித்துள்ளார்.
- ஆர்.முருகன்.
Summary
The Tamil Maanila Congress party, founded by Moopanar in 1996, has contested elections under five different symbols to date.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தலைவா்கள் சூறாவளி பிரசாரம்: தமிழகத்தில் சூடுபிடித்துள்ள தோ்தல் களம்!

பிரிவினையைத் தூண்டுவது காங்கிரஸும் திமுகவும்தான்: எம்.யுவராஜா
தமாக வேட்பாளர்கள் யார்யார்? ஜி.கே. வாசன் அறிவிப்பு!

அதிமுக - தமாகா தொகுதிப் பங்கீடு! இபிஎஸ்ஸுடன் ஜி.கே. வாசன் சந்திப்பு!
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை

