தமிழ்நாட்டில் வாக்குப்பதிவு முடிந்தது!15 ஆண்டுகளாக துரோகமிழைக்கும் திரிணமூல் காங்கிரஸ்: பிரதமர் மோடிமேற்கு வங்கம்: மாலை 5 மணி வரை 89.93% வாக்குகள் பதிவு!தமிழ்நாட்டில் மாலை 5 வரை 82.24% வாக்குப்பதிவு! கரூர் முதலிடம்! வாக்குச் சாவடிக்குள் காவலர்கள் நுழையக் கூடாது! தமிழக டிஜிபி உத்தரவு! எதிர்கட்சிகளின் மாற்றம் முழக்கம் வாக்கு எண்ணிக்கை முடிந்த பிறகே தெரியும்: அமைச்சர் துரைமுருகன் திமுக ஊடக ஒருங்கிணைப்பு அறையை பார்வையிட்டார் முதல்வர் ஸ்டாலின்!
/

நீட் தேர்வை ரத்து செய்து மீண்டும் பழைய முறையைக் கொண்டுவர வேண்டும்: மாயாவதி

நீட் தேர்வின் விளைவு எதுவாக இருந்தாலும் லட்சக்கணக்கான மாணவர்கள் வலியும் மன வேதனையும் அடைவார்கள்

News image

பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி

Updated On :25 ஜூலை 2024, 10:10 am

தேசிய நுழைவுத் தேர்வை ரத்து செய்து மருத்துவ சேர்க்கைக்கான "பழைய முறையை" மீண்டும் நடைமுறைப்படுத்த வேண்டும் என்று பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

மருத்துவ நுழைவுத்தேர்வான நீட் தேர்வில் பல்வேறு முறைகேடுகள் நடந்துள்ளதாக எதிர்க்கட்சிகள் பாஜக தலைமையிலான மத்திய அரசையும் கடுமையாகச் சாடி வருகின்றனர். இது தீவிர பிரச்னையாக மாறி நாடாளுமன்றத்திலும், உச்ச நீதிமன்றத்தில் விவாதிக்கப்பட்டு வருகின்றது.

இதுதொடர்பான அவரின் எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவில்,

நீட் தேர்வின் விளைவு எதுவாக இருந்தாலும் லட்சக்கணக்கான மாணவர்கள் வலியும் மன வேதனையும் அடைவார்கள் என்பது மட்டும் நிச்சயம். இதுபோன்ற முக்கியமான தேர்வை முறையாக நடத்த முடியும் என்று மக்களுக்கு உறுதியளிக்க மத்திய அரசு தவறிவிட்டது, இது பிரச்னையை மேலும் தீவிரமாக்கியிருக்கிறது.

பல மாநில அரசுகளின் கோரிக்கையை ஏற்று, ஏன் மருத்துவ படிப்புக்கான நுழைவுத்தேர்வை மீண்டும் பழைய முறையை நடைமுறைப்படுத்தக்கூடாது என்று அவர் இந்தியில் பதிவிட்டுள்ளார்.

தேசிய தேர்வு முகமை மற்றும் மத்திய கல்வி அமைச்சகம் நடத்தும் மருத்துவ படிப்புகளான எம்பிபிஎஸ், பிடிஎஸ், ஆயுஷ் போன்ற படிப்புகளுக்கான சேர்க்கையின் நுழைவுத்தேர்வில் பெரிய அளவிலான முறைகேடுகள் நடைபெற்றதாகவும், வினாத்தாள் கசிவு, ஆள்மாறட்டம் உள்ளிட்ட தொடர் சர்ச்சை நிலவி வருகின்றது. மேலும் நீட் இளநிலை மறுதேர்வு குறித்த மனுக்களையும் உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்ததும் குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.