தமிழ்நாட்டில் வாக்குப்பதிவு முடிந்தது!15 ஆண்டுகளாக துரோகமிழைக்கும் திரிணமூல் காங்கிரஸ்: பிரதமர் மோடிமேற்கு வங்கம்: மாலை 5 மணி வரை 89.93% வாக்குகள் பதிவு!தமிழ்நாட்டில் மாலை 5 வரை 82.24% வாக்குப்பதிவு! கரூர் முதலிடம்! வாக்குச் சாவடிக்குள் காவலர்கள் நுழையக் கூடாது! தமிழக டிஜிபி உத்தரவு! எதிர்கட்சிகளின் மாற்றம் முழக்கம் வாக்கு எண்ணிக்கை முடிந்த பிறகே தெரியும்: அமைச்சர் துரைமுருகன் திமுக ஊடக ஒருங்கிணைப்பு அறையை பார்வையிட்டார் முதல்வர் ஸ்டாலின்!
/

அமலாக்கத் துறை நோட்டீஸுக்கு எதிரான கேஜரிவாலின் மனு செப்.9-க்கு ஒத்திவைப்பு

அமலாக்கத் துறை நோட்டீஸ்: கேஜரிவாலுக்கு மேலும் 4 வாரங்கள் அவகாசம்

News image

அரவிந்த் கேஜரிவால் - கோப்புப் படம்

Updated On :12 ஜூலை 2024, 12:56 am

அமலாக்கத் துறை அனுப்பிய நோட்டீஸுக்கு எதிராக தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால் தாக்கல் செய்த மனு மீதான விசாரணையை செப்டம்பர் 9-ஆம் தேதிக்கு தில்லி உயர்நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.

இந்த மனுவை வியாழக்கிழமை விசாரித்த நீதிபதிகள் பிரதிபா எம்.சிங், அமித் சர்மா ஆகியோர் அடங்கிய அமர்வு, அமலாக்கத் துறை தாக்கல் செய்த பிரமாண பத்திரத்துக்கு பதிலளிக்க கேஜரிவால் தரப்புக்கு மேலும் 4 வாரங்கள் அவகாசம் அளித்துள்ளது.

முன்னதாக, அமலாக்கத் துறை தரப்பில் ஆஜரான வழக்குரைஞர், "கைது நடவடிக்கையிலிருந்து ஜாமீன் வழங்க உயர்நீதிமன்றம் மறுத்துவிட்ட நிலையில், கேஜரிவால் கைது செய்யப்பட்டதாகவும், அந்த நோட்டீஸுக்கு எதிரான மனு தேவையற்றது' என்று கூறினார்.

தில்லி கலால் கொள்கை தொடர்பான சட்டவிரோத பணப்பரிவர்த்தனை தடுப்புச் சட்ட வழக்கு விசாரணைக்கு ஆஜராகுமாறு அமலாக்கத் துறை அனுப்பிய 9-ஆவது நோட்டீûஸ எதிர்த்து தில்லி முதல்வரும் ஆம் ஆத்மியின் தேசிய அமைப்பாளருமான கேஜரிவால் உயர்நீதிமன்றத்தை அணுகினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.