பிரதமர் நரேந்திர மோடி, அயோத்தியில் ராமர் கோயில் சிலை பிரதிஷ்டை விழாவை முன்னிட்டு, ஆந்திர மாநிலத்தில் ராமாயணத்துடன் தொடர்புடைய லேபாக்ஷி கோயிலுக்குச் சென்று வழிபாடு நடத்தினார்.
லேபாக்ஷி கோயிலானது, ராமருடன் வனவாசத்தில் இருந்த சீதா தேவியை, ராவணன் கடத்திச் சென்றபோது ஜடாயு என்ற மாபெரும் கழுகு பின் தொடர்ந்து சென்ற தலம் லேபாக்ஷி என்று நம்பப்படுகிறது.
இறக்கும் நிலையில் இருந்த ஜடாயு, சீதா தேவி சிறைப்பிடிக்கப்பட்டதைப் பற்றிய முக்கியமான தகவல்களைத் தெரிவித்ததால், லேபாக்ஷியில் ராமரால் தெய்வீக விடுதலையான 'மோட்சம்' அடைந்ததாகவும் கூறப்படுகிறது.
அயோத்தியில் ஜனவரி 22ஆம் தேதி ராமர் சிலை பிரதிஷ்டை விழா நடைபெறவிருக்கும் நிலையில், தென் மாநிலங்களுக்கு பிரதமர் மோடி பயணம் மேற்கொண்டுள்ளார்.
இதையும் படிக்க.. திருமணம் செய்யலாம்.. அதற்காக இப்படியா?
இரண்டு நாள் பயணமாக ஆந்திரா மற்றும் கேரளம் செல்லும் பிரதமர் மோடி, ஆந்திரத்தில் இன்று பல்வேறு நலத்திட்டங்களையும் தொடங்கி வைத்தார். லேபாக்ஷி கோயிலுக்கு வந்த பிரதமர் மோடி அங்கு சிறப்பு வழிபாடு செய்தார். பின்னர் அவர் கேரளம் சென்று குருவாயூர் உள்ளிட்ட கோயில்களுக்கும் செல்லவிருக்கிறார்.
அயோத்தி ராமர் சிலை பிரதிஷ்டையில் பல லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
திமுக கூட்டணி 200-க்கும் அதிகமான தொகுதிகளில் வெற்றி பெறும்: ஓபிஎஸ்

பேருந்து சேவை இல்லாததால் பயணிகள் சாலை மறியல்
இன்றைய ராசி பலன் (24.04.2026) - மகரம்
இன்றைய ராசி பலன் (24.04.2026) - மிதுனம்
வீடியோக்கள்

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை

பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு தொடக்கம்! | #Ajith | #EPS | #Seeman |
தினமணி செய்திச் சேவை

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை


