நாளை பாமக மாவட்டச் செயலா்கள் கூட்டம்மேலும் 2 தகவல் ஆணையா்கள் நியமனம்ஆதிதிராவிடா், பழங்குடியினா் மாணவா்களுக்கு ரூ.6,604 கோடி கல்வி உதவித் தொகை - தமிழக அரசு தகவல்இன்று தென், வட தமிழகத்தின் ஒருசில இடங்களில் மழைக்கு வாய்ப்புஜேஇஇ 2-ஆம் கட்ட முதன்மைத் தோ்வு: விண்ணப்பிக்க இன்று கடைசிஇந்திய தலைமைத் தோ்தல் ஆணையா் நாளை தமிழகம் வருகைசிறுமிகளுக்கு இலவச கருப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி திட்டம்: மத்திய அரசு விரைவில் தொடக்கம்நாளை இந்தியா வருகிறாா் கனடா பிரதமா்மணிப்பூரில் வன்முறையால் இடம்பெயா்ந்த மக்களுக்காக 5,000 புதிய வீடுகள் - மத்திய அரசு ஒப்புதல்குடிமைப் பணிகள் தோ்வு: இணையவழி விண்ணப்பங்களை சமா்ப்பிக்க 3 நாள் அவகாசம் நீட்டிப்பு
/

தில்லி சட்டப்பேரவையில் இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு: கேஜரிவால்

தில்லி சட்டப்பேரவையில் இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தவிருப்பதாக கேஜரிவால் அறிவிப்பு.

News image
ஆபரேஷன் தாமரை சேறானதை நிரூபிக்க நம்பிக்கை வாக்கெடுப்பு கோருகிறார் கேஜரிவால்
Updated On :16 பிப்ரவரி 2024, 11:35 am

DIN

புது தில்லி: தில்லி சட்டப்பேரவையில் இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு கோரவிருப்பதாக புது தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால் திடீரென அறிவித்துள்ளார்.

ஆம் ஆத்மி எம்எல்ஏக்களை பாஜக விலைபேசி வருவதாகக் குற்றம்சாட்டியிருந்த நிலையில், இன்று இந்த திடீர் அறிவிப்பு வெளியாகியிருக்கிறது.

தில்லியில் தனது ஆட்சியைக் கவிழ்க்க பாஜக, ஆம் ஆத்மி எம்எல்ஏக்களிடம் ரூ.25 கோடி தருவதாக பேரம் பேசி வருவதாக தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால் குற்றம்சாட்டியிருந்த நிலையில், இன்று இந்த திடீர் அறிவிப்பை வெளியிட்டிருக்கிறார்.

ஆனால், தில்லி பேரவையில் திடீரென நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தப்போவதற்கு குறிப்பிட்ட எந்தக் காரணத்தையும் அரவிந்த் கேஜரிவால் அறிவிக்கவில்லை.

மேலும், தனது எக்ஸ் வலைதளப் பக்கத்தில் இது குறித்து ஹிந்தியில் குறிப்பிட்டிருக்கும் அரவிந்த் கேஜரிவால், இன்று தில்லி சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பு கோரவிருப்பதாகவும் நாளை இதன் மீது விவாதம் நடைபெறும் என்றும் தெரிவித்துள்ளார்.

கடந்த 14ஆம் தேதி தில்லி கலால் கொள்கையில் மோசடி நடைபெற்றதாகக் கூறி, பிப்ரவரி 19ஆம் தேதி நேரில் விசாரணைக்கு ஆஜராகுமாறு அமலாக்கத் துறை, அரவிந்த் கேஜரிவாலுக்கு சம்மன் அனுப்பியிருந்தது. இது அமலாக்கத் துறை அரவிந்த் கேஜரிவாலுக்கு அனுப்பிய 6வது சம்மன் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.