15 ஆண்டுகளாக துரோகமிழைக்கும் திரிணமூல் காங்கிரஸ்: பிரதமர் மோடிதமிழ்நாடு பேரவைத் தேர்தல் 2026! வாக்குப்பதிவில் வரலாற்றுச் சாதனை!திமுகவை விடுவிக்க விதை விதைக்கப்பட்டுள்ளது: அன்புமணிதமிழ்நாட்டில் வாக்குப்பதிவு முடிந்தது!15 ஆண்டுகளாக துரோகமிழைக்கும் திரிணமூல் காங்கிரஸ்: பிரதமர் மோடி
/

நாடாளுமன்ற புதிய கட்டடத்தில் கசியும் மழை நீர்!

நாடாளுமன்ற கட்டடத்தில் கசிந்த மழை நீரை பக்கெட் வைத்து பிடித்த காட்சி வைரல்.

News image

நாடாளுமன்ற புதிய கட்டடத்தில் கசியும் மழை நீர் - Congress x

Updated On :1 ஆகஸ்ட் 2024, 3:57 am

தில்லியில் புதன்கிழமை பெய்த கனமழையால் நாடாளுமன்றத்தின் புதிய கட்டடத்தில் மழை நீர் கசிவு ஏற்பட்டுள்ளது.

நாடாளுமன்ற வளாகத்தில் மழை நீர் கசியும் பகுதியில் பிளாஸ்டிக் பக்கெட் வைத்து பிடிக்கும் காணொலிகள் இணையத்தில் வைரலாகி வருகின்றது.

தில்லி பகுதியில் புதன்கிழமை மாலை பெய்த மிககனமழையால் பல்வேறு பகுதிகளில் வெள்ள நீர் சூழ்ந்தது. சுமார் 1 மணிநேரத்தில் 112.5 மி.மீ, மேல் மழை கொட்டித் தீர்த்தது.

இந்நிலையில், நாடாளுமன்ற வளாகத்தில் மழை நீர் தேங்கியதுடன், புதிய கட்டடத்தின் மையப் பகுதியில் மழை நீர் கசிவு ஏற்பட்டுள்ளதை எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சித்துள்ளனர்.

இந்த விவகாரத்தை தொடர்ந்து, காங்கிரஸ் எம்பி மாணிக்கம் தாகூர் மக்களவையில் ஒத்திவைப்பு தீர்மானம் நோட்டீஸ் அளித்துள்ளார்.

அந்த நோட்டீஸில், நாடாளுமன்றத்தின் மையப் பகுதியில் மழை நீர் கசிவு ஏற்பட்டுள்ளது குறித்து அவை நடவடிக்கையை ஒத்திவைத்து விவாதிக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.

மேலும், அனைத்துக் கட்சி எம்பிக்களும் அடங்கிய சிறப்புக் குழு அமைக்கப்பட்டு நாடாளுமன்ற கட்டடத்தை ஆய்வு செய்ய வேண்டும் எனக் குறிப்பிட்டுள்ளார்.

ஒத்திவைப்பு நோட்டீஸ்

ஒத்திவைப்பு நோட்டீஸ் - x

நாடாளுமன்றத்தில் புதிய கட்டடம் கடந்தாண்டு மே 28ஆம் தேதி பிரதமர் நரேந்திர மோடியால் திறந்து வைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.