முரசொலி கட்டடம் பஞ்சமி நிலத்தில் கட்டப்பட்டதாக மத்திய இணை அமைச்சர் எல். முருகன் தெரிவித்த கருத்துக்கு எதிராக முரசொலி அறக்கட்டளை அவதூறு வழக்கு தொடர்ந்தது. இதை ரத்து செய்ய சென்னை உயர்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்ததற்கு எதிரான எல்.முருகனின் மேல்முறையீட்டு மனு மீது பதிலளிக்க முரசொலி அறக்கட்டளைக்கு உச்சநீதிமன்றம் புதன்கிழமை நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டது.
சென்னை கோடம்பாக்கத்தில் முரசொலி அறக்கட்டளை அலுவலகம் அமைந்துள்ள இடம் பஞ்சமி நிலம் என மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், தேசிய எஸ்சி, எஸ்டி ஆணையத்தின் துணைத் தலைவராக பதவி வகித்த போது தெரிவித்தாகக் கூறப்படுகிறது. இந்த விவகாரத்தில் எல்.முருகனுக்கு எதிராக முரசொலி அறக்கட்டளை சார்பில் தொடரப்பட்ட குற்றவியல் அவதூறு வழக்கு சென்னை சிறப்பு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.
இதை ரத்து செய்யக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் எல்.முருகன் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ் அளித்த தீர்ப்பில், மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.
இதையடுத்து, உச்சநீதிமன்றத்தில் எல்.முருகன் தரப்பில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த மனு நீதிபதிகள் பி.ஆர். கவாய், எம்.கே. மிஸ்ரா ஆகியோர் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது.
அப்போது, மனுதாரர் எல்.
முருகன் தரப்பில் மூத்த வழக்குரைஞர் சித்தார்த் தவே ஆஜராகி, "அரசியல் உள்நோக்கத்துடன் இப்புகார் பதிவு செய்யப்பட்டுள்ளது. அறக்கட்டளையின் அலுவலகம் அமைந்துள்ள நிலத்தின் உரிமை தொடர்பாக மனுதாரர் தெரிவித்த கருத்துக்காக எப்படி அவதூறு வழக்குப் பதிவு செய்ய முடியும்? ஒரு விவகாரம் தொடர்பாக தனது கருத்தை வெளிப்படுத்த அரசியலமைப்புச்சட்டத்தின் பிரிவு 19 (கருத்து சுதந்திரம்) கீழ் மனுதாரருக்கு உரிமை உள்ளது' என்று வாதிட்டார்.
இது தொடர்பாக முரசொலி அறக்கட்டளை 6 வாரத்தில் பதிலளிக்க நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டனர். மேலும், சென்னை சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்றுவரும் இது தொடர்பான குற்ற அவதூறு வழக்கு விசாரணைக்கு, அடுத்த விசாரணை தேதி வரை இடைக்கால தடை விதித்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
சூரியின் மண்டாடி படப்பிடிப்பு நிறைவு! சிறப்பு விடியோ!

தலைவர்கள், பிரபலங்கள் வாக்களிப்பு - புகைப்படங்கள்

சாய் சுதர்சன் அதிரடி சதம்: பெங்களூருக்கு 206 ரன்கள் இலக்கு!

ஏப்.26-ல் சூர்யாவின் கருப்பு இசை வெளியீட்டு விழா!
வீடியோக்கள்

வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?
தினமணி செய்திச் சேவை

வெள்ளை அறிக்கை வேண்டும்! சிசிடிவி காட்சியை வெளியிட்ட செல்வப்பெருந்தகை! | IT RAID | Congress
இணையதளச் செய்திப் பிரிவு

வரலாறு காணாத வாக்குப்பதிவா? | N Gopalaswami Interview | TN Election 2026 | Vote percentage in tamil nadu
தினமணி செய்திச் சேவை

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை


