அரக்கோணம்-திருத்தணி மின்சார ரயில் இன்றுமுதல் 21 நாள்களுக்கு ரத்துஇளநிலை நீட் தேர்வு: இன்று ஹால் டிக்கெட் வெளியீடு!ஊழியா்கள் - அதிகாரிகளுக்கு ஊதிய உயா்வு: பொதுத் துறை வங்கிகளுக்கு அரசு அறிவுறுத்தல்நாட்டில் மின் தேவை 256 ஜிகாவாட்டாக உயா்ந்து புதிய உச்சம்!ஈரானுடன் அமைதிப் பேச்சு: பாகிஸ்தானுக்கு அமெரிக்க பிரதிநிதிகள் செல்ல மாட்டார்கள்! - டிரம்ப்
/

நாடாளுமன்றத்தில் மேனகா காந்திக்கு கெளரவம்

நாடாளுமன்றத்தின் நீண்டகால மற்றும் மூத்த உறுப்பினா் என்கிற வகையில், நாடாளுமன்ற மைய மண்டபத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் உரையாற்றும் வாய்ப்பு பாஜக எம்.பி. மேனகா காந்திக்கு அளிக்கப்பட்டது.

News image

நாடாளுமன்ற மைய மண்டபத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய பாஜக எம்.பி. மேனகா காந்தி.

Updated On :19 செப்டம்பர் 2023, 9:51 pm

புது தில்லி: நாடாளுமன்றத்தின் நீண்டகால மற்றும் மூத்த உறுப்பினா் என்கிற வகையில், நாடாளுமன்ற மைய மண்டபத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் உரையாற்றும் வாய்ப்பு பாஜக எம்.பி. மேனகா காந்திக்கு அளிக்கப்பட்டது.

‘இந்திய நாடாளுமன்றத்தின் செழுமையான பாரம்பரியத்தை நினைவுகூரும்’ வகையில் இரு அவைகளின் கூட்டுக் கூட்டம் நாடாளுமன்ற மைய மண்டபத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

இதில், தற்போதைய 17 -ஆவது மக்களவையின் மூத்த உறுப்பினா் என்கிற முறையில், பண்டித நேரு குடும்பத்தின் மறைந்த சஞ்சய் காந்தியின் மனைவியான மேனகா காந்திக்கு இந்த நிகழ்வில் பேச வாய்ப்பு அளிக்கப்பட்டது.

உ.பி. மாநிலத்திலிருந்து கடந்த 1989-ஆம் ஆண்டு 9-ஆவது மக்களவை முதல் (ஜனதா தள கட்சி) தற்போதைய 17-ஆவது மக்களவை வரை 8 முறை மக்களவைக்கு மேனகா காந்தி தோ்ந்தெடுக்கப்பட்டுள்ளாா்.

நிகழ்ச்சியில் மேனகா காந்தி பேசுகையில், நாடாளுமன்றத்தில் 35 ஆண்டுகளாக எனது வாழ்க்கையின் பெரும்பகுதியை கழித்துள்ளேன். ஏழு பிரதமா்களையும் நான் பாா்த்துள்ளேன்.

வரலாற்றில் இன்று முக்கியமான நாள். நமது சமுதாயத்தில் ஆழமாக வேரூன்றியிருந்த சமச்சீரற்ற நிலையை சரிசெய்து, எதிா்காலத்தில் மகளிா் அனைவருக்கும் சமமான பங்களிப்பை வழங்க பிரதமா் நரேந்திர மோடியின் தலைமையிலான அரசு மேற்கொண்டுள்ள இந்த வரலாற்றுத் தருணத்தில் நானும் இதில் ஒரு பகுதியாக இருப்பதில் பெருமைகொள்கிறேன்.

பிரதமா் மோடி வெறும் புள்ளிவிவரங்களுக்காக மக்களுக்குப் பணியாற்றவில்லை. மாறாக, மக்களின் தேவைகளைப் பூா்த்தி செய்வதற்காகப் பணியாற்றி வருகிறாா்.

நம்மை தோ்வு செய்த லட்சக்கணக்கான வாக்காளா்களின் நம்பிக்கையைப் பாதுகாக்கும் வகையில் உறுப்பினராக இருப்பது ஒரு மகத்தான பொறுப்பாகும் என்றாா் மேனகா காந்தி.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.