அதானி விவகாரம் குறித்து விசாரணை நடத்த வலியுறுத்தி, நாடாளுமன்றத்திலிருந்து அமலாக்கத் துறைக்கு பேரணியாகச் சென்ற எதிர்க்கட்சிகளை, விஜய் சௌக் பகுதியில் காவல்துறையினர் தடுத்து நிறுத்திய நிலையில் பேரணி கைவிடப்பட்டது.
அமலாக்கத் துறை அலுவலகத்துக்குச் செல்லும் வழியில், எதிர்க்கட்சியினரின் பேரணியை காவல்துறையினர் முற்றுகையிட்டு தடுத்து நிறுத்தினர்.
இதையும் படிக்க.. ஆசியாவின் முதல் பெண் ரயில் ஓட்டுநருக்கு அடுத்த கௌரவம்
நாடாளுமன்றத்துக்கு வெளியே 144 தடை உத்தரவு பிறப்பித்திருப்பதால், பேரணியை தொடர்ந்தால் கைது நடவடிக்கை எடுக்கப்படும் என்று காவல்துறையினர் எச்சரிக்கை விடுத்தனர். இதையடுத்து, எதிர்க்கட்சித்தலைவர்கள் பேரணியை கைவிட்டு, மீண்டும் நாடாளுமன்றத்துக்கே திரும்பினர்.
தங்களது அமைதிப் பேரணியை காவல்துறையினர் தொடர அனுமதிக்கவில்லை என்று குற்றம்சாட்டியிருக்கும் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, அதானி விவகாரத்தில் விரிவான விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று வலியுறுத்தி அமலாக்கத் துறையிடம் புகார் மனு கொடுக்கவிருந்தோம். ஆனால், எங்களது பேரணி விஜய் சௌக் அருகே தடுத்து நிறுத்தப்பட்டது என்று தெரிவித்துள்ளார்.
இதையும் படிக்க.. தமிழகத்தின் தேவை வெறும் மருத்துவமனைகள் அல்ல.. அதற்கும் மேலே
மாநிலங்களவையின் காங்கிரஸ் குழு துணைத் தலைவர் பிரமோத் திவாரி கூறுகையில், எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த 200 நாடாளுமன்ற உறுப்பினர்கள் அமலாக்கத் துறை அலுவலகத்தை நோக்கிப் புறப்பட்டோம். ஆனால், காவல்துறையினர் எங்களை வலுக்கட்டாயமாக தடுத்து நிறுத்தினர். அதனால், நாங்கள் நாடாளுமன்றத்துக்கே திரும்பி வந்து, நாடாளுமன்ற வளாகத்துக்குள் போராட்டத்தில் ஈடுபடவிருக்கிறோம் என்று கூறினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

வாக்குச் சாவடி மையத்தில் வாக்கு சேகரித்ததாக இரு தரப்பினா் இடையே வாக்குவாதம்

பயங்கரவாத குழுக்களை பாகிஸ்தான் ஒடுக்க வேண்டும்: அமெரிக்க எம்.பி. பிராட் ஷொ்மன்

ஜனநாயக கடமையாற்றிய 90 வயது மூதாட்டி

நாமக்கல், ஓமலூா், சேலத்தில் திருமணக்கோலத்தில் வாக்களித்த தம்பதிகள்
வீடியோக்கள்

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை

பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு தொடக்கம்! | #Ajith | #EPS | #Seeman |
தினமணி செய்திச் சேவை

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை


