டி20 உலக கோப்பையில் இன்று... இந்திய அணியை 76 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி தென்னாப்பிரிக்கா அபாரம்!தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட ஜி கே எம் தமிழ்குமரன் வெற்றிஆப்கானிஸ்தானில் பாகிஸ்தான் தாக்குதல்: இந்தியா கண்டனம்!சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் சந்திப்புபாகிஸ்தானிடமிருந்து போர் விமானங்கள் கொள்முதல்: சோமாலியா பேச்சுவார்த்தை‘ஆபரேசன் த்ரஷி-1’: ஜம்மு - காஷ்மீரில் மேலும் ஒரு பயங்கரவாதியின் உடல் கண்டெடுப்பு! இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி புதன்கிழமை உரையாற்றுகிறார்ஏஐ மாநாட்டில் காங்கிரஸ் சட்டையின்றிப் போராட்டம்: “வெளிநாட்டு விருந்தினர்கள் முன் இந்தியாவுக்குத் தலைகுனிவு!” - பிரதமர் மோடி
/

அதானி, ராகுல் விவகாரம்: மாநிலங்களவை பிற்பகல் 2 வரை ஒத்திவைப்பு

மாநிலங்களவையில் எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டதால் பிற்பகல் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது.

News image
Updated On :7 பிப்ரவரி 2024, 6:44 am

DIN


மாநிலங்களவையில் எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டதால் பிற்பகல் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது.

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாவது அமர்வு நேற்று தொடங்கிய நிலையில், அதானி விவகாரம் குறித்து நாடாளுமன்ற கூட்டுக் குழு விசாரணைக்கு உத்தரவிடக் கோரி எதிர்க்கட்சிகளும், பிரிட்டனியில் இந்திய நாடாளுமன்றம் குறித்து பேசிய ராகுல் காந்தி மன்னிப்பு கேட்க வேண்டுமென்று ஆளுங்கட்சியும் மோதிக் கொண்டதால் நாள் முழுவதும் அவைகள் ஒத்திவைக்கப்பட்டன.

இந்நிலையில், அதானி விவகாரம் குறித்து விவாதிக்க எதிர்க்கட்சி எம்பிக்கள் இன்றும் மாநிலங்களவையில் அமளியில் ஈடுபட்டனர். அதே சமயம் ராகுல் காந்தி மன்னிப்பு கேட்க வேண்டுமென்று மத்திய அமைச்சர் பியூஸ் கோயல் பேசியதற்கு எதிர்ப்பு தெரிவித்தும் காங்கிரஸ் எம்.பி.க்கள் கூச்சலிட்டனர்.

இதனால் மாநிலங்களவை பிற்பகல் 2 மணிவரை ஒத்திவைக்கப்படுவதாக அவைத் தலைவர் ஜகதீப் தன்கர் தெரிவித்தார்.

முன்னதாக இதே விவகாரம் குறித்து மக்களவையில் எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டதால் கூட்டம் தொடங்கிய சில நிமிடங்களிலேயே பிற்பகல் 2 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.