தெலங்கானா மாநிலத்திலிருந்து, உயர்படிப்பு படிக்க அமெரிக்கா சென்ற இளம் பெண்ணின் உடைமைகள் திருடப்பட்டதால், தெருவோரத்தில் கிடக்கும் அவல நிலை குறித்த தகவல் தெரிய வந்துள்ளது.
இது குறித்து தகவல் அறிந்ததும், அப்பெண்ணின் தாயார், மத்திய வெளி விவகாரத் துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு கடிதம் எழுதியிருக்கிறார். தனது மகளை மீட்டு பத்திரமாக இந்தியா அழைத்து வர உதவுமாறு அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.
அந்தக் கடிதத்தில், எனது மகள் சயிதா லுலு மின்ஹஜ் ஸைடி, எம்எஸ் படிக்க அமெரிக்க பல்கலைக்கழகத்தில் கடந்த 2021ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் சேர்ந்தார்.
இதையும் படிக்க.. சென்னை தீவுத்திடலில் என்னென்ன வரப்போகிறது?
அவர் அங்குப் படித்துவந்த நிலையில், கடந்த இரண்டு மாதங்களாக அவரிடமிருந்து எந்த அழைப்பும் தகவலும் வரவில்லை. இதனால் கவலையடைந்திருந்த நிலையில், ஹைதராபாத்தைச் சேர்ந்த இளைஞர்கள் இரண்டு பேர் தங்களுக்கு தொலைபேசி வாயிலாக அழைத்து, தங்களது மகள் மன அழுத்தத்தில் இருப்பதாகவும் அவரது உடைமைகள் அனைத்தும் திருடுப்போனதால் அவர் சிகாகோவில் தெருவோரத்தில் தவித்து வருவதாகவும் தெரிவித்துள்ளனர். அவர்கள் தகவல் அளித்த பிறகே தங்களது மகள் குறித்த விவரம் தெரிய வந்திருப்பதாக அந்தக் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளனர்.
இதையடுத்து, அங்கிருக்கும் சமூக ஆர்வலர்கள் மூலம் அவர் மீட்கப்பட்டு, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் டிவிட்டரில் தகவல்கள் பகிரப்பட்டு வருகிறது.
அமெரிக்காவில் படித்துமுடித்து வேலை கிடைக்காததால், மன உளைச்சலுக்கு ஆளாகிவிட்டதாகவும், அவ்வப்போது மனநிலை தடுமாற்றம் அடைவதாகவும், அவரை மீட்டவர்கள் தெரிவித்துள்ளனர்.
அவர் மனநிலை சீரானால்தான் இந்தியாவுக்கு திரும்பி அனுப்பப்படுவார் என்றும், அவருக்கு உடனடியாக சிகிச்சை தேவைப்படுவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த விவகாரத்தில் தலையிட்டு மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் உதவ வேண்டும் என்றும் கோரிக்கைகளை எழுந்துள்ளன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

2025-26 நிதியாண்டில் மாருதி சுஸுகி 23.4 லட்சம் காா்கள் தயாரிப்பு

இன்ஃபோசிஸ் நிகர லாபம் ரூ.8,501 கோடி

நாஸ்காம் புதிய தலைவா் நியமனம்

சென்செக்ஸ், நிஃப்டி 2-ஆவது நாளாக சரிவு!
வீடியோக்கள்

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை

பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு தொடக்கம்! | #Ajith | #EPS | #Seeman |
தினமணி செய்திச் சேவை

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை


