ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றிஈரானுக்குப் பயணிக்க வேண்டாம்! இந்தியர்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்15 ஆண்டுகளாக துரோகமிழைக்கும் திரிணமூல் காங்கிரஸ்: பிரதமர் மோடிதமிழ்நாடு பேரவைத் தேர்தல் 2026! வாக்குப்பதிவில் வரலாற்றுச் சாதனை!திமுகவை விடுவிக்க விதை விதைக்கப்பட்டுள்ளது: அன்புமணி15 ஆண்டுகளாக துரோகமிழைக்கும் திரிணமூல் காங்கிரஸ்: பிரதமர் மோடி
/

ஜார்க்கண்ட் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: மருத்துவ தம்பதி உள்பட 6 பேர் பலி

ஜார்க்கண்ட் மாநிலம் தன்பாத் மாவட்டம், ஹஸ்ரா மருத்துவமனையில் நேரிட்ட பயங்கர தீ விபத்தில், மருத்துவ தம்பதி உள்பட ஆறு பேர் பலியாகினர்.

News image

ஜார்க்கண்ட் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து

Updated On :28 ஜனவரி 2023, 12:18 pm


தன்பாத்: ஜார்க்கண்ட் மாநிலம் தன்பாத் மாவட்டம், ஹஸ்ரா மருத்துவமனையில் நேரிட்ட பயங்கர தீ விபத்தில், மருத்துவ தம்பதி உள்பட ஆறு பேர் பலியாகினர்.

நள்ளிரவு 2.30 மணிக்கு மருத்துவமனையில் தீப்பற்றியதாக தகவல் கிடைத்து ஆறு தீயணைப்பு வாகனங்களில் விரைந்துச் சென்ற தீயணைப்பு வீரர்கள், பல மணி நேரம் போராடி தீயை அணைத்தனர்.

மிகப்பெட்டிய கட்டடத்தின் இரண்டாம் தளத்தில் மருத்துவமனை இயங்கி வந்த நிலையில், அங்கு தீப்பிடித்து, மளமளவென மருத்துவமனை முழுவதும் தீப்பற்றியது. இன்று காலை 10 மணியளவில்தான் முழுமையாக தீ அணைக்கப்பட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த மருத்துவமனையின் மருத்துவர்கள் டாக்டர் பிரேமா, டாக்டர் விகாஸ் ஹஸ்ரா மற்றும் நான்கு ஊழியர்கள், இந்த மருத்துவமனை வளாகத்துக்குள் அமைந்திருக்கும் அவர்களது வீடுகளில் உறங்கிக் கொண்டிருக்கும் போது இந்த விபத்து நேர்ந்ததால், அனைவரும் தீ விபத்தில் சிக்கி பலியானதாகக் கூறப்படுகிறது.

அதேவேளையில், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 9 பேர் பத்திரமாக மீட்கப்பட்டுளள்னர். மின் கசிவு காரணமாக இந்த விபத்து நேரிட்டதாகக் கூறப்படுகிறது.

மருத்துவமனையில் எந்த பாதுகாப்புக் கருவிகளும் இல்லை என்றும், பல்வேறு அடிப்படை வசதிகளும் இல்லாமல் இருந்ததும் பயங்கர தீ விபத்துக்குக் காரணம் என்று கூறப்படுகிறது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.