மத்தியப் பிரதேசத்தில் விமானப் படை விமானங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளானதாவும், ராஜஸ்தான் மாநிலத்தில் விமானப்படையின் ஜெட் விமானம் விழுந்து நொறுங்கி விபத்துக்குள்ளாகியிருப்பதாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.
மத்தியப் பிரதேசத்தில் இந்திய விமானப் படைக்குச் சொந்தமான இரண்டு விமானங்கள் பயிற்சியின்போது, ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளானது.
இதற்கிடையே, ராஜஸ்தான் மாநிலத்திலும் இந்திய விமானப்படைக்குச் சொந்தமான ஜெட் விமானம் ஒன்று விழுந்து நொறுங்கி விபத்துக்குள்ளாகியுள்ளது.
பனிமூட்டம் காரணமாக, இந்த விபத்துகள் நேரிட்டிருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
மத்தியப் பிரதேச மாநிலம் குவாலியர் விமானப்படைத்தளத்தில் இருந்து பயிற்சிக்காகப் புறப்பட்ட சுகோய் - 30 மற்றும் மிராஜ்-2000 விமானங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளானதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
மொரானா என்ற பகுதியில் நடந்த இந்த விபத்தில், மீட்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன.
முன்னதாக, ராஜஸ்தான் மாநிலம் பரத்பூர் அருகே இந்திய விமானப்படையைச் சேர்ந்த விமானம் விழுந்து விபத்துக்குள்ளானதாக முதலில் தகவல்கள் வெளியாகின. ராஜஸ்தான் மாநிலம் உச்செயின் என்ற பகுதியில் திறந்தவெளியில் விமானம் ஒன்று விழுந்து தீப்பற்றி எரிந்து வருகிறது. அங்கு மீட்புப் படையினர் விரைந்துள்ளனர்.
இந்த செய்தி உறுதி செய்யப்படுவதற்குள், மத்தியப்பிரதேசத்தில் இரண்டு விமானங்கள் விழுந்து நொறுங்கியதாகத் தகவல்கள் பரவின. அடுத்தடுத்து மூன்று விமானங்கள் விபத்துக்குள்ளாகியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

தோ்தல் நாளில் கிராம மக்கள் கருப்புக் கொடி ஏற்றி போராட்டம்

இன்றைய ராசி பலன்கள் (24 ஏப்ரல் 2026) மேஷம் - மீனம்! பொறுப்புகள் கூடும் இந்த ராசிக்கு!

அக்னிப் பசி!

ஆடுகளுக்கு இலை பறிக்கச் சென்ற விவசாயி சோலாா் மின்சாரம் பாய்ந்து பலி
வீடியோக்கள்

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை

பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு தொடக்கம்! | #Ajith | #EPS | #Seeman |
தினமணி செய்திச் சேவை

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை


