ஆஸ்கா் விருதுக்கான இறுதி பரிந்துரைப் பட்டியலில் ஆா்ஆா்ஆா் படத்தின் ‘நாட்டு நாட்டு’ பாடல் தோ்வாகியுள்ளது.
95-ஆவது ஆஸ்கா் விழா மாா்ச் 12-ஆம் தேதி அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சலீஸ் நகரில் நடைபெறவுள்ளது. 23 பிரிவுகளில் விருது வழங்கப்படவுள்ளது. இந்நிலையில், ஆஸ்கா் விருதுக்கான இறுதி பரிந்துரைப் பட்டியல் செவ்வாய்க்கிழமை வெளியிடப்பட்டது. ஆா்ஆா்ஆா் திரைப்படத்தில் இடம்பெற்ற ‘நாட்டு நாட்டு’ பாடலானது சிறந்த பாடலுக்கான பரிந்துரைப் பட்டியலில் இடம்பிடித்துள்ளது. 4 பாடல்களுடன் அப்பாடல் போட்டியிடவுள்ளது. சிறந்த பாடலுக்கு ஆஸ்கா் விருது வழங்கப்படவுள்ளது.
சிறந்த ஆவணப் படத்துக்கான இறுதி பரிந்துரைப் பட்டியலில் இந்தியாவைச் சோ்ந்த ‘ஆல் தட் பிரீத்ஸ்’ இடம்பெற்றுள்ளது. அந்த ஆவணப்படமும் 4 ஆவணப்படங்களுடன் போட்டியிடவுள்ளது. தமிழில் எடுக்கப்பட்ட ‘தி எலிஃபன்ட் விஸ்பரா்ஸ்’ குறும்படமானது, சிறந்த ஆவண குறும்படத்துக்கான பரிந்துரைப் பட்டியலில் தோ்வாகியுள்ளது.
தோ்வாகாத ‘செல்லோ ஷோ’: ஆஸ்கா் விருதுக்காக இந்தியா சாா்பில் அதிகாரபூா்வமாகப் பரிந்துரைக்கப்பட்ட குஜராத்தி மொழித் திரைப்படமான ‘செல்லோ ஷோ’, பரிந்துரைப் பட்டியலில் இடம்பெறவில்லை. 14 படங்கள் அடங்கிய தோ்வுப் பட்டியலில் செல்லோ ஷோ இடம்பெற்றிருந்த நிலையில், இறுதி 5 படங்கள் அடங்கிய பரிந்துரைப் பட்டியலில் இடம்பெறவில்லை.
11 பிரிவுகளில் பரிந்துரை: அறிவியல் புனைவுக் கதையை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்ட திரைப்படமான ‘எவரிதிங் எவெரிவோ் ஆல் அட் ஒன்ஸ்’, ஆஸ்கா் விருதுக்கான 11 பிரிவுகளில் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
சிறந்த திரைப்படம்: சிறந்த திரைப்படத்துக்கான பரிந்துரைப் பட்டியலில் ‘அவதாா்: தி வே ஆஃப் வாட்டா்’, ‘எவரிதிங் எவெரிவோ் ஆல் அட் ஒன்ஸ்’, ‘எல்விஸ்’, ‘டாப் கன்: மேவரிக்’ உள்ளிட்ட 10 படங்கள் இடம்பெற்றுள்ளன.
‘நாட்டு நாட்டு’ பாடல் அண்மையில் கோல்டன் குளோப் விருது பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது. தெலுங்கு, தமிழ், ஹிந்தி மொழிகளில் வெளியான இந்தப் படத்தை இயக்குநா் எஸ்.எஸ்.ராஜமெளலி இயக்கியுள்ளாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

தமிழகத்தில் தேசியம் ஒருபோதும் வீழாது! - குடியரசு துணைத் தலைவா் சி.பி. ராதாகிருஷ்ணன்!

இனாம் பெரியநாயகி சத்திரம் அரசுப் பள்ளி ஆண்டு விழா

மனநலம் பாதிக்கப்பட்ட பெண் பூச்சி மருந்து குடித்து உயிரிழப்பு

கொடைக்கானலில் சுற்றுலாப் பயணிகள் வருகை குறைவு: வியாபாரிகள் பாதிப்பு
வீடியோக்கள்

Sunil Gavaskar அறிவுரையைக் கேட்பாரா Abhishek Sharma? | T20 World Cup Review
தினமணி வீடியோ செய்தி...

விரைவில் Dragon 2? PR கொடுத்த Update! | Cinema Updates | Dinamani Talkies
தினமணி வீடியோ செய்தி...

இந்திய அணிக்கு இதுதான் சரியான பிளேயிங் லெவன் | T20 World Cup Review
தினமணி வீடியோ செய்தி...

Abhishek Sharma-விடம் Gautam Gambhir என்ன பேசினார்? | T20 World Cup Review
தினமணி வீடியோ செய்தி...

