காஷ்மீரில் கடந்தாண்டு கிட்டத்தட்ட1,700 போதைப்பொருள் கடத்தல்காரர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக செவ்வாய்க்கிழமை போலீஸார் தெரிவித்தனர்.
இதுதொடர்பாக போலீஸார் கூறுகையில்,
இந்த காலகட்டத்தில் பணம், ஆயுதங்கள் மற்றும் வெடிமருந்துகள் என
பெருமளவிலான கடத்தல் பொருள்கள் மீட்கப்பட்டுள்ளது. மேலும் இதுதொடர்பாக 1,021 வழக்குகள் பதிவு செய்துள்ளதாகவும் அவர் கூறினார்.
கைப்பற்றப்பட்ட கடத்தல் பொருள்களில் 212 கிலோ கிராம் சரஸ், 56 கிலோகிராம் ஹெராயின், 13 கிலோகிராம் பிரவுன் சுகர், 1.127 டன் பாங், 4.355 டன் பாப்பி ஸ்ட்ரா மற்றும் 1.567 டன் ஃபுக்கி ஆகியவை அடங்கும்.
சட்டவிரோதமாக பயிரிடப்பட்ட கசகசா மற்றும் பாங்கிற்கு எதிரான நடவடிக்கைகளையும் போலீஸார் மேற்கொண்டனர், சுமார் 51 ஹெக்டேர் நிலப்பரப்பில் பரவியிருந்த பயிர்களை அழித்ததாக அவர் கூறினார்.
போதைப்பொருள் அச்சுறுத்தலுக்கு எதிரான போர் மேலும் வீரியத்துடன் தொடரும் என்று காஷ்மீர் கூடுதல் காவல்துறை இயக்குநர் விஜய் குமார் தெரிவித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

கெங்கவல்லி அருகே தேர்தல் பணியில் இருந்த சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் மரணம்

முதல்வர் வேட்பாளர்களின் தொகுதிகளில் வாக்கு சதவீதம் எவ்வளவு?

கோவை கணியூரில் வாக்களித்தவர்களுக்கு மரக்கன்றுகள்: மக்களிடையே பெரும் வரவேற்பு!

அந்தியூரில் விரலில் வைக்கப்பட்ட ‘ஸ்டாம்ப் பேடு’ மை!
வீடியோக்கள்

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை

பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு தொடக்கம்! | #Ajith | #EPS | #Seeman |
தினமணி செய்திச் சேவை

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை


