தங்கம் விலை சவரனுக்கு ரூ. 480 குறைந்தது!தமிழகம் முழுவதும் 25 இடங்களில் கட்சியினரிடையே தகராறுதமிழகத்தில் 85% வாக்குப் பதிவு வரலாறு காணாத சாதனைமேற்கு வங்க முதல்கட்டத் தோ்தலில் 92% வாக்குப் பதிவு: பல இடங்களில் வன்முறை! வேட்பாளா்கள் மீது தாக்குதல்தமிழகத்தில் 62 வாக்கு எண்ணும் மையங்களில் 18 ஆயிரம் போலீஸாா் பாதுகாப்புமேற்கு வங்கத்தில் ஏப்.26,27-இல் திரிணமூல் காங்கிரஸுக்கு கேஜரிவால் பிரசாரம்இலங்கை நிதி அமைச்சக கணினி அமைப்பில் ஊடுருவல்: ரூ.23.5 கோடி மாயம்வாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுசிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு அட்டவணை வெளியீடு: மே 15 முதல் 21 வரை நடைபெறும்ஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுஇஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றி
/

கொல்கத்தாவில் நாளை மீண்டும் தொடங்குகிறது ஒற்றுமை நடைப்பயணம்!

காங்கிரஸின் ஒற்றுமை நடைப்பயணம் கொல்கத்தாவில் நாளை முதல் மீண்டும் தொடங்குகிறது.

News image
Updated On :2 ஜனவரி 2023, 7:39 am

காங்கிரஸின் ஒற்றுமை நடைப்பயணம் கொல்கத்தாவில் நாளை முதல் மீண்டும் தொடங்குகிறது.

காங்கிரஸ் கட்சியின் மாநிலத் தலைவர் ஆதிர் ரஞ்சன் சௌத்ரி தென்மேற்கு பகுதியில் உள்ள தாரதாலாவில் இருந்து அணிவகுப்பைத் தொடங்கி வைக்கிறார். 

மேற்கு வங்காளத்தில் கட்சியின் மூத்த தலைவர்கள் பலருடன் இணைந்து, நகரின் முக்கியமான சந்திப்புகள் மற்றும் தெருக்கள் வழியாக நீண்ட அணிவகுப்பு நடைபெறும். மேலும்  எல்ஜின் சாலையில் உள்ள நேதாஜி பவனுக்குச் செல்ல உள்ளனர். அங்கு மூத்த தலைவர்கள் சுபாஷ் சந்திர போஸின் உருவப்படத்திற்கு மாலை அணிவிப்பார்கள்.

இந்த பயணம் மத்திய கொல்கத்தாவில் உள்ள கட்சியின் தலைமையகமான பிதான் பவனை அடையும் என்றும், வடக்கு கொல்கத்தாவில் உள்ள சிம்லா தெருவில் உள்ள சுவாமி விவேகானந்தரின் இல்லத்திற்கும் சென்றடைந்து, அங்கு கட்சித் தலைவர்கள் விவேகானந்தருக்கு அஞ்சலி செலுத்த திட்டமிடப்பட்டுள்ளனர். 

இந்த அணிவகுப்பானது வடக்கு ஷியாம்பஜார் பகுதிக்கு செல்லும் என்று கட்சி வட்டாரம் தெரிவித்துள்ளது. 

நேதாஜி சுபாஷ் சந்திர போஸின் பிறந்தநாளான ஜனவரி 23 அன்று, மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்களில் சுமார் 800 கி.மீ தூரம் பயணம் செய்து வடக்கு வங்காளத்தில் உள்ள குர்சியோங்கில் நடைப்பயணம் முடிவடைகிறது. 

செப்டம்பர் 7ஆம் தேதி தொடங்கிய நடைப்பயணமானது தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, தெலங்கானா, மகாராஷ்டிரா, மத்தியப் பிரதேசம் மற்றும் ராஜஸ்தான் உள்ளிட்ட பல மாநிலங்களுக்குச் சென்றுள்ளது குறிப்பிடத்தக்கது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.