வெளியுறவுத் துறைக்கு ரூ.18,050 கோடி ஒதுக்கீடு: இலங்கைக்கு ரூ.150 கோடி
வெளியுறவுத் துறைக்கு பட்ஜெட்டில் ரூ.18,050 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இது கடந்த ஆண்டை விட 4.64 சதவீதம் (ரூ.17,250 கோடி ) அதிகமாகும்.


வெளியுறவுத் துறைக்கு பட்ஜெட்டில் ரூ.18,050 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இது கடந்த ஆண்டை விட 4.64 சதவீதம் (ரூ.17,250 கோடி ) அதிகமாகும்.
பொருளாதாரத்தில் சிக்கித் தவிக்கும் இலங்கைக்கு ரூ.150 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
பல்வேறு நாடுகளின் வளா்ச்சித் திட்ட நிதி உதவியாக ரூ.5,408 கோடியும், இந்தியாவில் நடைபெறும் ஜி-20 மாநாட்டுப் பணிகளுக்காக ரூ.990 கோடியும் ஒதுக்கப்பட்டுள்ளது.
இந்தியாவின் அண்டை நட்பு நாடு திட்டத்தின்படி, பூடானின் மேம்பாட்டுக்கு ரூ.2,400 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இது வெளியுறவுத் துறையின் மொத்த ஒதுக்கீட்டில் 41.04 சதவீதமாகும்.
இதேபோல், மாலத்தீவு நாட்டில் நடைபெறும் மேம்பாட்டு பணிகளுக்கு கூடுதலாக ரூ.400 கோடியும், ஆப்கானிஸ்தானுக்கு ரூ.200 கோடி, ஈரானின் சாபஹாா் துறைமுக மேம்பாட்டுக்கு ரூ.100 கோடி, நேபாளத்துக்கு ரூ.550 கோடி, மோரீஷஸுக்கு ரூ. 460 கோடி, மியான்மருக்கு ரூ.400 கோடி, இலங்கைக்கு ரூ.150 கோடி, ஆப்பிரிக்க நாடுகளுக்கு ரூ.250 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...