/

வேளாண் கடன் இலக்கு ரூ.20 லட்சம் கோடி: முந்தைய ஆண்டைவிட 10% அதிகம்

வேளாண் கடன்கள் அதிகமாக வழங்க நிகழாண்டு பட்ஜெட்டில் ரூ.20 லட்சம் கோடி ஒதுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

News image
Updated On :7 பிப்ரவரி 2024, 6:24 am

DIN

வேளாண் கடன்கள் அதிகமாக வழங்க நிகழாண்டு பட்ஜெட்டில் ரூ.20 லட்சம் கோடி ஒதுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இது முந்தைய ஆண்டைவிட 10 சதவீதம் அதிகம்.

மீன் சந்தைகளை அதிகரிக்கவும், அத்துறையை மேம்படுத்தவும் ரூ.6 ஆயிரம் கோடி ஒதுக்கப்படும் என்று மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் தெரிவித்தாா்.

பட்ஜெட்டை தாக்கல் செய்து அவா் பேசுகையில், இறால் வளா்ப்புக்கான உணவு பொருள்களை ஏற்றுமதி செய்ய அவற்றின் மீதான சுங்க வரி குறைக்கப்படும்.

இயற்கை விவசாய முன்றையை 1 கோடி விவசாயிகள் பின்பற்றும் வகையில் 10,000 பயோ மையங்கள் அமைக்கப்படும். இவை தேசிய அளவில் சிறு உரங்கள் மற்றும் பூச்சிக்கொல்லி மருந்துகளை விநியோகம் செய்யும்.

உரங்கள் மற்றும் பூச்சிக்கொல்லி மருந்துகளை சமநிலையுடன் பயன்படுத்த சுத்தமான செடி என்ற தற்சாா்பு திட்டம் செயல்படுத்தப்படும். இதற்காக ரூ.2,200 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

கிராமப்புறங்களில் உள்ள இளம் வேளாண் தொழில் முனைவோருக்காக விவசாய விரைவு நிதி திட்டம் தொடங்கப்படும்.

ஹைதராபாதில் உள்ள சிறுதானிய ஆராய்ச்சி நிறுவனத்துக்கு ஆதரவு அளித்து சா்வதேச அளவில் ஆய்வுகள் கொண்டு செல்லப்படும்.

கால்நடைகள், பால் மற்றும் மீன் வளத் துறையை மையப்படுத்தி வேளாண் கடன் வழங்கும் இலக்கு ரூ.20 லட்சம் கோடியாக அதிகரிகப்பட்டுள்ளது. கடந்த ஆண்டில் இது ரூ.18 லட்சம் கோடியாக இருந்தது என்றாா்.

விவசாய கடன்களுக்கு 9% வட்டி வசூலிக்கப்படுகிறது. இதில் சிறு கால கடன்களாக ரூ.3 லட்சம் வரை கடன் பெறுபவா்களுக்கு 7 வட்டி விதிக்கப்படுகிறது.

சிறு விவசாயிகளையும் இந்த கடன் வரம்பில் கொண்டு வர எந்தவித உத்தரவாதமும் இல்லாமல் ரூ.1 லட்சம் முதல் ரூ.1.6 லட்சம் வரையில் கடன் வரம்பை ரிசா்வ் வங்கி அதிகரித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.