புது தில்லி: தில்லி காவல்துறை, புத்தாண்டு கொண்டாட்டத்தில் எந்தவித அசாம்பிதமும் ஏற்படாதிருக்க போதிய பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்துள்ளதாகத் தெரிவித்துள்ளது. 2,500-க்கும் அதிகமான போக்குவரத்து காவலர்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
ஏறத்தாழ 10 ஆயிரம் காவலர்கள் மாநிலம் முழுவதும் பணியில் ஈடுபட்டுள்ளதாக காவல் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
“புத்தாண்டைமகிழ்ச்சியோடு வரவேற்பதை உறுதி செய்வதே நாங்கள் வேண்டுவது. யாரேனும் மற்றவர்களுக்குத் தொல்லைதரும் வகையில் சாலைகளில் நடந்து கொண்டால் கடும் விளைவுகளைச் சந்திக்க நேரிடும்” எனத் தெரிவித்துள்ளனர்.
மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டுபவர்களைச் சோதிக்க 250 குழுக்கள் பணியில் உள்ளதாகவும் இரவு 8 மணிக்கு மேல் கானட் பிளேஸ் பகுதிக்குச் செல்லும் வாகனங்கள் முறைப்படுத்தப்படும் எனவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
கானட் பிளேஸுக்கு அருகில் உள்ள ராஜீவ் செளக் மெட்ரோ ரயில் நிலையத்தில் வெளியேறும் வழி இரவு 9 மணியோடு மூடப்படும் என முன்பே அறிவிக்கப்பட்டிருந்தது.
ஹரியானா, உத்தர பிரதேச எல்லைகளில் பாதுகாப்புக்காக சாலைகளில் கூடுதல் தடைகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
இதையும் படிக்க: புத்தாண்டு கொண்டாட்டம்: நெரிசலைத் தவிர்க்க மெட்ரோ அறிவிப்பு!
மக்கள் திரள் கூடும் இடங்களில் முன்கூட்டியே பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக மாநில காவல்துறை தெரிவித்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

திமுக கூட்டணி : எந்தெந்த தேதிகளில் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை! - முழு விவரம்
சூர்யா - 47 இப்படித்தான் இருக்கும்: ஜித்து மாதவன்

ஷிகர் தவானுக்கு மறுமணம்..! 40 வயதில் ஐரீஷ் காதலியைக் கரம்பிடித்தார்!

பாஜகவில் இணைந்த அசாம் காங்கிரஸ் முன்னாள் மாநிலத் தலைவர்!
வீடியோக்கள்

#t20wc | இங்கிலாந்து அதிரடியைச் சமாளிக்கும் திறன் இலங்கையிடம் உள்ளதா? | T20 World Cup Review |
தினமணி வீடியோ செய்தி...

#t20wc | பழைய பகையுடன் வரும் தென்னாப்பிரிக்கா: சமாளிப்பாரா சூர்யகுமார்? | T20 World Cup | IND vs SA |
தினமணி வீடியோ செய்தி...

அமெரிக்கா வரி செலுத்தாது! இந்தியா செலுத்தும்!: Trump | செய்திகள்: சில வரிகளில் | 21.02.26
தினமணி வீடியோ செய்தி...

#T20WC | அபிஷேக் சர்மா சதமடிப்பார்னு சொன்னா நம்புவீங்களா? | Abhishek Sharma | T20 World Cup |
தினமணி வீடியோ செய்தி...

