புது தில்லி: நாட்டில் இதுவரை ஒட்டுமொத்தமாக 63 பேருக்கு கரோனா வைரஸின் புதிய திரிபான ஜெஎன். 1 வகை கண்டறியப்பட்டிருக்கும் நிலையில், கோவாவில்தான் அதிக எண்ணிக்கை பதிவாகியிருப்பதாக மத்திய சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.
ஒட்டுமொத்த ஜெஎன்.1 வைரஸ் பாதிப்பில் கிட்டத்தட்ட 34 பாதிப்புகள் கோவாவில் பதிவாகியிருக்கிறது. மகாராஷ்டிரத்தில் 9 பேருக்கும், கர்நாடகத்தில் 8 பேருக்கும், கேரளத்தில் 6 பேருக்கும், தமிழகத்தில் நான்கு பேருக்கும், தெலங்கானாவில் இருவருக்கும் புதிய வகை கரோனா பாதித்துள்ளது.
இதையும் படிக்க.. திட்டம் இரண்டு திரைப்பட பாணி காதல்! தோழியைக் கொன்ற திருநம்பி!
இதுவரை பதிவான பாதிப்புகளில் ஒரே இடத்தில் அதிக பாதிப்பு போன்ற எதுவும் இல்லை, மேலும் ஜெஎன்.1 வைரஸ் திரிபு மாறுபாட்டின் அனைத்து நோயாளிகளும் லேசான அறிகுறிகளைக் கொண்டிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில், நாட்டில் கரோனா பாதித்த நோயாளிகளின் மொத்த எண்ணிக்கை 4,054 ஆக உள்ளது, அதிக எண்ணிக்கையிலான பாதிப்புகள் கேரளத்தில் பதிவாகியிருக்கிறது. இதில் கேரளத்தில் 3128 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளது. அடுத்த இடத்தில் கர்நாடகம் உள்ளது. அங்கு 344 பேர் உள்ளனர்.
உலக சுகாதார நிறுவனத்தின் முன்னாள் மூத்த விஞ்ஞானி டாக்டர் சௌமியா சுவாமிநாதன் பேசுகையில், ஜெஎன். 1 திரிபு கரோனா மிக அபாயமானது என்றோ, இதனால், பாதிப்புகள் அல்லது பலி எண்ணிக்கை அதிகரிக்கும் என்றோ இதுவரை எந்த தகவலும் இல்லை என்று விளக்கம் அளித்துள்ளார்.
தற்போதைய சான்றுகளின் அடிப்படையில் ஜெஎன்.1ஆல் ஒட்டுமொத்தமாக மக்களுக்கு ஏற்படும் ஆபத்து குறைவாகவே உள்ளதாக உலக சுகாதார அமைப்பு விளக்கமளித்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
திமுக கூட்டணி 200-க்கும் அதிகமான தொகுதிகளில் வெற்றி பெறும்: ஓபிஎஸ்

பேருந்து சேவை இல்லாததால் பயணிகள் சாலை மறியல்
இன்றைய ராசி பலன் (24.04.2026) - மகரம்
இன்றைய ராசி பலன் (24.04.2026) - மிதுனம்
வீடியோக்கள்

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை

பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு தொடக்கம்! | #Ajith | #EPS | #Seeman |
தினமணி செய்திச் சேவை

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை

