தமிழகம் முழுவதும் 25 இடங்களில் கட்சியினரிடையே தகராறுதமிழகத்தில் 85% வாக்குப் பதிவு வரலாறு காணாத சாதனைமேற்கு வங்க முதல்கட்டத் தோ்தலில் 92% வாக்குப் பதிவு: பல இடங்களில் வன்முறை! வேட்பாளா்கள் மீது தாக்குதல்தமிழகத்தில் 62 வாக்கு எண்ணும் மையங்களில் 18 ஆயிரம் போலீஸாா் பாதுகாப்புமேற்கு வங்கத்தில் ஏப்.26,27-இல் திரிணமூல் காங்கிரஸுக்கு கேஜரிவால் பிரசாரம்இலங்கை நிதி அமைச்சக கணினி அமைப்பில் ஊடுருவல்: ரூ.23.5 கோடி மாயம்வாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுசிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு அட்டவணை வெளியீடு: மே 15 முதல் 21 வரை நடைபெறும்ஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுஇஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றி
/

'பே சிஎம்' போஸ்டர்கள்: கர்நாடக முதல்வருக்கு எதிராக இப்படி ஒரு போராட்டம்

'பே சிஎம்' என்று தலைப்பிட்டு, கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மையின் புகைப்படம் அடங்கிய போஸ்டர்கள் பெங்களூரு நகர் முழுக்க ஒட்டப்பட்டிருந்தது. 

News image
Updated On :21 செப்டம்பர் 2022, 10:57 am

பெங்களூரு: 'பே சிஎம்' என்று தலைப்பிட்டு, கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மையின் புகைப்படம் அடங்கிய போஸ்டர்கள் பெங்களூரு நகர் முழுக்க ஒட்டப்பட்டிருந்தது.

எண்ம வடிவிலான பணப்பரிமாற்ற செயலி பேடிஎம்-மின் விளம்பர போஸ்டர் போல வடிவமைக்கப்பட்டிருக்கும் இந்த போஸ்டரின் க்யூஆர் கோட் வடிவத்துக்குள், கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மையின் புகைப்படம் இடம்பெற்றுள்ளது.

கர்நாடகத்தில் ஆளும் பாஜக அரசில், பல்வேறு துறைகளில் நடக்கும் ஊழல்களை எடுத்துரைக்கும் வகையில், காங்கிரஸ் கட்சி சார்பில் ஒட்டப்பட்ட இந்த போஸ்டரில் 40 சதவீதம் இங்கே ஏற்றுக் கொள்ளப்படும் என்ற வாசகமும் இடம்பெற்றுள்ளது.

பொதுப் பணித் துறை ஒப்பந்தங்கள், அரசு வேலை வாய்ப்புகள் என பல விவகாரங்களில் ஊழல் நடைபெற்றுள்ளதாக தொடர்ந்து செய்திகள் வெளியாகும் நிலையில், போஸ்டர் போராட்டத்தை காங்கிரஸ் கையிலெடுத்துள்ளது.

பெங்களூரு நகர் முழுக்க ஒட்டப்பட்டிருக்கும் இந்த போஸ்டர்கள் குறித்து தகவல் அறிந்த கர்நாடக அரசு, உடனடியாக போஸ்டர்களைக் கிழிக்க உத்தரவிட்டது. காவல்துறை உள்ளிட்டோர் இப்பணியில் ஈடுபட்டுள்ளனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.