தமிழகம் முழுவதும் 25 இடங்களில் கட்சியினரிடையே தகராறுதமிழகத்தில் 85% வாக்குப் பதிவு வரலாறு காணாத சாதனைமேற்கு வங்க முதல்கட்டத் தோ்தலில் 92% வாக்குப் பதிவு: பல இடங்களில் வன்முறை! வேட்பாளா்கள் மீது தாக்குதல்தமிழகத்தில் 62 வாக்கு எண்ணும் மையங்களில் 18 ஆயிரம் போலீஸாா் பாதுகாப்புமேற்கு வங்கத்தில் ஏப்.26,27-இல் திரிணமூல் காங்கிரஸுக்கு கேஜரிவால் பிரசாரம்இலங்கை நிதி அமைச்சக கணினி அமைப்பில் ஊடுருவல்: ரூ.23.5 கோடி மாயம்வாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுசிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு அட்டவணை வெளியீடு: மே 15 முதல் 21 வரை நடைபெறும்ஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுஇஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றி
/

குருவாயூர் கோயில் மேல்சாந்தியாக தேர்வாகியிருக்கும் யூ-டியூப் புகழ் மருத்துவர் 

குருவாயூர் ஸ்ரீ கிருஷ்ணன் கோயிலின் புதிய மேல்சாந்தியாக தேர்வாகியிருக்கும் கிரண் ஆனந்த் பற்றித்தான் தற்போது நகரம் முழுவதும் பேச்சாக உள்ளது.

News image

குருவாயூர் கோயில் மேல்சாந்தியாக தேர்வாகியிருக்கும் யூ-டியூப் புகழ் மருத்துவர் 

Updated On :19 செப்டம்பர் 2022, 11:29 am


திரிசூர்: குருவாயூர் ஸ்ரீ கிருஷ்ணன் கோயிலின் புதிய மேல்சாந்தியாக தேர்வாகியிருக்கும் கிரண் ஆனந்த் பற்றித்தான் தற்போது நகரம் முழுவதும் பேச்சாக உள்ளது.

இதற்கு, 34 வயதாகும் கிரண் ஆனந்த், குருவாயூர் கோயில் மேல்சாந்தியாக தேர்வாகியிருப்பது மட்டுமல்ல காரணம்.  அவர் ஆயூர்வேத மருத்துவர் மற்றும் மனைவியுடன் இணைந்து யூ-டியூப் சேனல் தொடங்கி புகழ்பெற்றவர் என்பதும் கூட.

இது குறித்து கிரண் ஆனந்த் கூறுகையில், குருவாயூர் கோயிலில் மிக முக்கிய வழிபாடு மற்றும் சிறப்பு பூஜைகளை செய்யும் நான்கு ஒத்திகன் குடும்பங்களில் நான் ககட் மனாவைச் சேர்ந்தவன். எனது தந்தையுடன் சேர்ந்து இதுவரை பல சிறப்பு வழிபாடுகளை குருவாயூர் கோயிலில் செய்திருக்கிறேன். கோயில் மேல்சாந்தியாக நான் என்னால் முடிந்த அளவுக்குச் சிறப்பாக செய்வேன். இந்த புதிய பொறுப்புகள் மூலம், நான் கடவுளுக்கு இன்னும் ஒரு படி அருகே அழைக்கப்பட்டிருக்கிறேன் என்றார்.

கடந்த ஆறு ஆண்டுகளாக மாஸ்கோவில் ஆயுர்வேத மருத்துவப் பயிற்சி மேற்கொண்டு வந்தவர். அவரது தந்தை குருவாயூர் கோயிலில் பூஜைகளை மேற்கொண்டு வந்த நிலையில், வயோதிகம் காரணமாக அவரால் பூஜைகளை மேற்கொள்ள முடியாமல் போனதும், மாஸ்கோவிலிருந்து திரும்பி, தந்தையுடன் இணைந்து கொண்டார் கிரண்.

இவர் நடத்தி வரும் ஹார்ட் டியூஸ் ஹார்ட் என்ற உடல்நலம் தொடர்பான யூ-டியூப் சேனலில், கலை, தொழில்நுட்பம், சுற்றுலா என பல விடியோக்கள் இடம்பெற்றுள்ளன. அதில் சுமார் 179 விடியோக்கள் இடம்பெற்றுள்ளன.

மேல்சாந்தியாக தனது பொறுப்பு நிறைவடைந்ததும், குருவாயூரிலேயே ஆயுர்வேத மருத்துவமனைத் தொடங்கவும் கிரண் திட்டமிட்டுள்ளார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.