திருவனந்தபுரம்: கேரள முதல்வர் பினராயி விஜயன், இன்று கேரளத்துக்கு வந்திருந்த பிரதமர் நரேந்திர மோடியுடன் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்றிருந்தார்.
கொச்சியில் நடைபெற்ற விக்ராந்த் போர்க்கப்பலை நாட்டுக்கு அர்ப்பணிக்கும் நிகழ்ச்சி மற்றும் கடற்படைக்கான புதிய கொடியை அறிமுகப்படுத்தும் நிகழ்ச்சி என பிரதமருடன் படு பிசியாக அரசு விழாவில் பங்கேற்றிருந்த கேரள முதல்வர் பினராயி விஜயன், இன்று தனது திருமண நாளை மறக்கவில்லை.
பினராயி விஜயன் இன்று தனது 43வது திருமண நாளைக் கொண்டாடி வரும் நிலையில், தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் தனது மனைவி கமலாவுடன் அமர்ந்திருக்கும் புகைப்படத்தை அவரே பகிர்ந்துள்ளார்.
வியாழக்கிழமை முதல் பிரதமர் மோடி பங்கேற்கும் நிகழ்ச்சிகளில் தொடர்ந்து பங்கேற்று, நிகழ்ச்சிகளுக்கான ஏற்பாடுகளையும் முன்னிருந்து கவனித்து வரும் முதல்வர் பினராயி விஜயன், தனது திருமண நாளில், அவரே கைப்பட புகைப்படத்தைப் பகிர்ந்திருப்பது பலரது வாழ்த்துகளையும் ஆச்சரியத்தையும் உண்டாக்கியுள்ளது.
1979ஆம் ஆண்டு செப்டம்பர்மாதம் பினராயி விஜயன் ஆசிரியராக இருந்த கமலாவை திருமணம் செய்து கொண்டார். அப்போது பினராயி விஜயன் சட்டப்பேரவை உறுப்பினராக இருந்தார். இவர்களுக்கு ஒரு மகனும் மகளும் உள்ளனர். மகன் வங்கியில் பணியாற்றி வருகிறார். மகள் வீணா, அண்மையில் கேரள சுற்றுலாத் துறை அமைச்சர் பி.ஏ. மொஹம்மது ரியாஸை திருமணம் செய்து கொண்டார்.
கேரளத்தில் பிரதமர் மோடியுடனான நிகழ்ச்சிகள் நிறைவு பெற்றதும், கொச்சியிலிருந்து பினராயி விஜயன் திருவனந்தபுரம் திரும்பினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

இஸ்ரேல் - லெபனான் போா் நிறுத்தம் 3 வாரம் நீட்டிப்பு

தலைமைத் தோ்தல் ஆணையரை நீக்கக்கோரி மாநிலங்களவையில் எதிா்க்கட்சிகள் புதிய நோட்டீஸ்

திரிணமூல் காங்கிரஸ் நிலைகுலைந்துவிட்டது: பிரதமா் மோடி

ரைபகினா, ஆஸ்டபென்கோ முன்னேற்றம்
வீடியோக்கள்

வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?
தினமணி செய்திச் சேவை

வெள்ளை அறிக்கை வேண்டும்! சிசிடிவி காட்சியை வெளியிட்ட செல்வப்பெருந்தகை! | IT RAID | Congress
இணையதளச் செய்திப் பிரிவு

வரலாறு காணாத வாக்குப்பதிவா? | N Gopalaswami Interview | TN Election 2026 | Vote percentage in tamil nadu
தினமணி செய்திச் சேவை

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை


