நல்லகண்ணுவின் உடல்நிலையில் பின்னடைவு: இந்திய கம்யூ. மாநில செயலாளர் வீரபாண்டியன்முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் புதிய தொழில் முதலீடுகளுக்கு ஒப்புதல் நாளை (பிப். 24) நல்ல முடிவை அறிவிப்பேன் : சசிகலாதொகுதிப் பங்கீடு: கனிமொழி - கிரிஷ் சோடங்கர் சந்திப்பு!தமிழ்நாட்டின் மொத்த வாக்காளர்கள் 5.67 கோடிஇபிஎஸ் உறக்கத்தை கெடுத்த திமுகவின் சர்ஜிகல் ஸ்ட்ரைக்! முதல்வர் ஸ்டாலின்
/

பிரதமர் மோடியுடன் ஐ.நா பொதுச் செயலாளர் குட்டெரெஸ் சந்திப்பு! 

குஜராத்தில் உள்ள கெவாடியாவில் பிரதமர் மோடியுடன் ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் அன்டோனியா குட்டெரெஸ் சந்திப்பு நிகழ்த்தினார். 

News image
Updated On :1 பிப்ரவரி 2024, 10:37 am

PTI

குஜராத்தில் உள்ள கெவாடியாவில் பிரதமர் மோடியுடன் ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் அன்டோனியா குட்டெரெஸ் சந்திப்பு நிகழ்த்தினார். 

மூன்று நாள் பயணமாக இந்தியா வந்துள்ள குட்டெரெஸுடன் மோடி நீண்ட நேரம் உரையாடியதாக அதிகாரிகள் தெரிவித்தனர். அதன் முக்கியத்துவமாக  ஐ.நா பாதுகாப்பு கன்வுசிலில் நிரந்திர இடம் ஒதுக்குவது குறித்தும் விவாதிக்கப்பட்டது. மேலும், பயங்கரவாத தடுப்பு பற்றி உரையாடியதாக வட்டாரங்கள் தெரிவித்தன. 

சுற்றுச்சூழலுக்கான வாழ்க்கைமுறை திட்டத்தைப் பிரதமர் மோடியுடன் இணைந்து  ஐநா பொதுச் செயலாளர் குட்டெரஸ் தொடக்கிவைத்தார். 

மேலும், நாட்டின் முதல் 24x7 சூரிய சக்தி கிராமமாக சமீபத்தில் அறிவிக்கப்பட்ட மொதேராவிற்கும் குட்டெரஸ் பார்வையிட்டு, கிராமத்தைச் சேர்ந்த மக்களுடன் உரையாடுகிறார். 

அதன்பின்னர். வெளியுறவு அமைச்சா் எஸ்.ஜெய்சங்கருடன் அவா் இருதரப்பு பேச்சுவார்த்தையையும் நடத்தவுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.