/

பாஜக ஆளும் மாநிலத்தில் இரண்டு பொதுக் கூட்டங்களில் பங்கேற்கும் ராகுல்

குஜராத் மாநிலத்தில் இன்று நடைபெறும் இரண்டு காங்கிரஸ் பொதுக் கூட்டங்களில் பங்கேற்று கட்சியின் எம்.பி. ராகுல் காந்தி உரையாற்றவிருக்கிறார்.

News image

பாஜக ஆளும் மாநிலத்தில் இரண்டு பொதுக் கூட்டங்களில் பங்கேற்கும் ராகுல்

Updated On :21 நவம்பர் 2022, 10:56 am

ஆமதாபாத்: டிசம்பர் மாதம் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவிருக்கும் நிலையில், குஜராத் மாநிலத்தில் இன்று நடைபெறும் இரண்டு காங்கிரஸ் பொதுக் கூட்டங்களில் பங்கேற்று கட்சியின் எம்.பி. ராகுல் காந்தி உரையாற்றவிருக்கிறார்.

கடந்த இரண்டரை மாதங்களில், குஜராத் மாநிலத்துக்கு ராகுல் மேற்கொள்ளும் இரண்டாவது பயணமாக இது அமைந்துள்ளது. டிசம்பர் மாதம் 1 மற்றும் 5ஆம் தேதிகளில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவிருக்கும் நிலையில், ராகுல் குஜராத் செல்கிறார்.

பாஜக ஆளும் குஜராத் மாநிலம் சூரத் மாவட்டத்தின் மஹுவா மற்றும் ராஜ்கோட் நகரங்களில் இன்று பொதுக்கூட்டங்களில் அவர் பங்கேற்கிறார்.

கடந்த செப்டம்பர் 7ஆம் தேதி தொடங்கி, ராகுல் காந்தி இந்திய ஒற்றுமை நடைப்பயணத்தை மேற்கொண்டுள்ளார். கேரளம், தமிழகம், கர்நாடகம், ஆந்திரம் என இந்த மக்களை ஒன்றிணைக்கும் வகையில் ராகுல் காந்தியின் நடைப்பயணம் நடைபெற்று வருகிறது. தற்போது இந்த நடைப்பயணம் மகாராஷ்டிர மாநிலத்தில் நடைபெற்று வருகிறது. புதன்கிழமை மத்தியப் பிரதேசத்தை அடைகிறது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.