/

இந்திரா காந்தி பிறந்தநாள்: நினைவு கூர்ந்த பிரதமர் மோடி

முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் பிறந்தநாளில் பிரதமர் நரேந்திர மோடி அவரை நினைவு கூர்ந்து ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். 

News image
Updated On :1 பிப்ரவரி 2024, 10:53 am

DIN

முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் பிறந்தநாளில் பிரதமர் நரேந்திர மோடி அவரை நினைவு கூர்ந்து ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். 

முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் பிறந்தநாள் இன்று(நவ.19) கொண்டாடப்படுகிறது. நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் காங்கிரஸ் கட்சியினர் இந்திரா காந்திக்கு மரியாதை செலுத்தி வருகின்றனர். தில்லியில் உள்ள அவரது நினைவிடத்தில் சோனியா காந்தி உள்ளிட்ட காங்கிரஸ் தலைவர்கள் அஞ்சலி செலுத்தினர்.

இதையொட்டி பிரதமர் நரேந்திர மோடி, இந்திரா காந்தியை நினைவு கூர்ந்து ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

'நமது முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் பிறந்தநாளில் அவருக்கு அஞ்சலிகள்' என்று பதிவிட்டுள்ளார். 

அரசியல் தலைவர்கள் பலரும் இந்திரா காந்தியை நினைவு கூர்ந்து பதிவிட்டு வருகின்றனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.