நாஸ்காம் புதிய தலைவா் நியமனம்மேற்கு வங்க முதல்கட்டத் தோ்தலில் 92% வாக்குப் பதிவு: பல இடங்களில் வன்முறை! வேட்பாளா்கள் மீது தாக்குதல்மேற்கு வங்கத்தில் ஏப்.26,27-இல் திரிணமூல் காங்கிரஸுக்கு கேஜரிவால் பிரசாரம்தமிழகத்தில் 62 வாக்கு எண்ணும் மையங்களில் 18 ஆயிரம் போலீஸாா் பாதுகாப்புஇலங்கை நிதி அமைச்சக கணினி அமைப்பில் ஊடுருவல்: ரூ.23.5 கோடி மாயம்சிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு அட்டவணை வெளியீடு: மே 15 முதல் 21 வரை நடைபெறும்தமிழகத்தில் 85% வாக்குப் பதிவு வரலாறு காணாத சாதனைவாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 3 மையங்களில் பாதுகாப்பாக வைக்கப்பட்ட வாக்குப்பதிவு இயந்திரங்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுசட்டவிரோத குடியேற்றத்தைத் தடுக்க பிரிட்டன்-பிரான்ஸ் 3 ஆண்டு ஒப்பந்தம்இஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்இந்திய வெளியுறவுக் கொள்கையில் ஆப்பிரிக்காவுக்கு அதிக முக்கியத்துவம்: வெளியுறவு அமைச்சா் ஜெய்சங்கா்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றிஈரானுக்குப் பயணிக்க வேண்டாம்! இந்தியர்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்15 ஆண்டுகளாக துரோகமிழைக்கும் திரிணமூல் காங்கிரஸ்: பிரதமர் மோடிதமிழ்நாடு பேரவைத் தேர்தல் 2026! வாக்குப்பதிவில் வரலாற்றுச் சாதனை!
/

உக்ரைனிலிருந்து திரும்பிய இந்திய மருத்துவ மாணவர்களை அழைக்கிறது ரஷியா

போர் காரணமாக, படிப்பை பாதியிலேயே விட்டுவிட்டு உக்ரைனிலிருந்து திரும்பிய இந்திய மருத்துவ மாணவர்கள், தங்கள் நாட்டுக்கு வந்து கல்வி பயிலலாம் என்று ரஷியா அழைத்துள்ளது.

News image

கோப்புப்படம்

Updated On :11 நவம்பர் 2022, 11:12 am


புது தில்லி: போர் காரணமாக, படிப்பை பாதியிலேயே விட்டுவிட்டு உக்ரைனிலிருந்து திரும்பிய இந்திய மருத்துவ மாணவர்கள், தங்கள் நாட்டுக்கு வந்து கல்வி பயிலலாம் என்று ரஷியா அழைத்துள்ளது.

உக்ரைன் மற்றும் ரஷியாவில் மருத்துவக் கல்வி ஒன்றுதான் என்பதால், இந்திய மருத்துவ மாணவர்கள், உக்ரைனில் விட்ட மருத்துவக் கல்வியை தங்கள் நாட்டில் வந்து தொடர வசதி செய்யப்படும் என்று ரஷியா அறிவித்துள்ளது.

உக்ரைன் மீது ரஷியா போர் தொடுத்த போது, அச்சம் காரணமாக, அங்கிருந்த மருத்துவக் கல்லூரியில் பயின்று வந்த 24 ஆயிரம் இந்திய மருத்துவ மாணவர்கள் படிப்பை பாதியிலேயே விட்டுவிட்டு நாடு திரும்பினர்.

இவர்களுக்கு இந்தியாவில் உள்ள மருத்துவக் கல்லூரிகளில் சேர்க்கை அளிக்க முடியாது என்று மத்திய அரசு அறிவித்திருக்கும் நிலையிலும், உயிர் போனாலும் பரவாயில்லை என்று சில இந்திய மாணவர்கள் மீண்டும் உக்ரைனுக்குத் திரும்பி தங்களது கல்வியை தொடர்ந்து வருவதாக செய்திகள் வெளியான நிலையிலும் ரஷியா இந்த அழைப்பை விடுத்துள்ளது.

இந்தியாவுக்கான ரஷிய தூதர் ஒலேக் அவ்தீவ் சென்னையில் வெளியிட்ட அறிக்கையில், உக்ரைனில் மருத்துவக் கல்வி பயின்று, பாதியிலேயே விட்டுவிட்டு நாடு திரும்பிய இந்திய மருத்துவக் கல்வி மாணவர்கள், ரஷியாவிலும் ஒரே மாதிரியான (உக்ரைன்) மருத்துவக் கல்விதான் வழங்கப்படுகிறது என்பதால், தங்கள் நாட்டில் கல்வியைத் தொடரலாம். அவர்களுக்கு மக்கள் பேசும் மொழியும் தெரிந்திருக்கும், ஏனென்றால், உக்ரைனிலும் பெரும்பாலான மக்கள் ரஷிய மொழியைத்தான் பேசுவார்கள். ரஷியாவுக்கு இந்திய மருத்துவக் கல்வி மாணவர்களை அன்புடன் வரவேற்கிறோம் என்று தெரிவித்துள்ளார்.

இதற்கு முன்பு, புது தில்லியில் உள்ள ரஷிய தூதரும், இந்த அறிவிப்பை வெளியிட்டிருந்தார். தங்களது கல்வி பாதிக்காத வகையில், விட்ட இடத்திலிருந்து கல்வியை தொடர வாய்ப்பு ஏற்படுத்தித் தரப்படும் என்று கூறியிருந்தார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.