நான் பாஜகவில் சேரவில்லை என்றும் அதுகுறித்து இன்னும் முடிவு செய்யவில்லை என்றும் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகிய ஹார்திக் படேல் கடந்தவாரம் கூறியிருந்த நிலையில், அடுத்த வாரம் அவர் பாஜகவில் இணைவதாக கூறப்படுகிறது.
அவர் மே 30 அல்லது 31ஆம் தேதி பாஜகவில் இணையலாம் என்று தெரிய வந்துள்ளது.
இன்று ஆமதாபாத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றுப் பேசிய ஹார்திக் படேல், இது குறித்தும், தான் தேர்தலில் போட்டியிடப்போவது குறித்தும் சூசகமாகக் கூறியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பேசிய ஹார்திக் படேல், தான் பாஜகவில் இணையப்போவதாகவும், பேரவைத் தேர்தலில் எந்த தொகுதியிலிருந்து தான் போட்டியிட வேண்டும் என்பதை கட்சித் தலைமைதான் முடிவு செய்யும் என்றும் சோமநாதர் ஆலயத்திலிருந்து ஏக்தா யாத்திரை எனும் பேரணியை தலைமையேற்று நடத்தவிருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
குஜராத் காங்கிரஸ் செயல் தலைவர் ஹார்திக் படேல் கடந்த வாரம் புதன்கிழமை தனது பதவியை ராஜிநாமா செய்தார். இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பதிவில், 'காங்கிரஸ் கட்சியின் பதவியிலிருந்தும், அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்தும் நான் தைரியமாக ராஜிநாமா செய்திருக்கிறேன். என்னுடைய முடிவை காங்கிரஸ் கட்சியினரும், குஜராத் மக்களும் வரவேற்பார்கள் என்று நம்புகிறேன். குஜராத்தின் எதிர்கால வளர்ச்சிக்காக நான் பணிபுரிவேன்' என்று குறிப்பிட்டிருந்தார்.
மேலும் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்கு அனுப்பியிருந்த கடிதத்தில் நாட்டின் வளர்ச்சிக்கும் சமூகத்தின் வளர்ச்சிக்கும் காங்கிரஸ் தடையாக உள்ளது என்றும் மத்திய அரசின் பல்வேறு நலத்திட்டங்களுக்கு காங்கிரஸ் முட்டுக்கட்டையாக இருக்கிறது என்றும் குறிப்பிட்டிருந்தார்.
முன்னதாக இம்மாத தொடக்கத்திலேயே சுட்டுரை பக்கத்தில் 'குஜராத் காங்கிரஸ் செயல் தலைவர்' பதவியையும் 'கை' சின்னத்தையும் நீக்கியிருந்தார்.
இதனிடையே, அவர் பாஜகவில் இணையவிருப்பதாக பல்வேறு தகவல்கள் வந்தவண்ணம் இருந்தன. இன்று அதை அவர் உறுதி செய்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

மதுரை மாவட்டத்தில் 5 இடங்களில் வாக்கு எண்ணிக்கை மையங்கள்!
ஐ.நா. அவைத் தலைவர் அனலேனா இந்தியா வருகை!
ஓடிடியில் வெளியானது ஹேப்பி ராஜ்!
இந்தியா - நியூஸிலாந்து இடையே தடையற்ற வர்த்தக ஒப்பந்தம்!
வீடியோக்கள்

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை

பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு தொடக்கம்! | #Ajith | #EPS | #Seeman |
தினமணி செய்திச் சேவை

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை


