அதிதீவிர கண்காணிப்பில் நல்லகண்ணு: ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை தகவல்கேரள மாநிலத்தின் பெயரை 'கேரளம்' என்று மாற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல்அதிமுக பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமி வரியை உயர்த்தி திட்டங்களை நிறைவேற்றுவோம் : இபிஎஸ் விளக்கம்சென்னை புறநகர் ரயில்கள் ரத்து: ரயில்வே மெத்தனமாக செயல்படக் கூடாது! - கனிமொழிகுமரியில் திருவள்ளுவர் சிலை வெள்ளி விழா நுழைவாயில் திறப்பு!பொங்கல் தொகுப்புடன் ஆண்டுதோறும் ரூ. 1,000 வழங்கப்படும்: இபிஎஸ் அறிவிப்புகடும் சரிவில் பங்குச்சந்தை! 700 புள்ளிகள் குறைந்த சென்செக்ஸ்!பிரதமர் மோடியின் இஸ்ரேல் பயணத்துக்கு காங்கிரஸ் எதிர்ப்பு!கட்டாயப்படுத்தி என்னை முதல்வராக்கினார்கள்; தனிக்கட்சி தொடங்கமாட்டேன்: ஓபிஎஸ்எதிர்க்கட்சித் தலைவரா? அல்லது இந்தியாவை எதிர்ப்பவர்களின் தலைவரா? ராகுல் மீது பாஜக எம்.பி. கடும் தாக்கு!மார்ச் 1 - திருப்பரங்குன்றத்தில் பிரதமர் மோடி தரிசனம்!ஒவ்வொரு குடும்பத்துக்கும் ரூ. 10,000 கருணைத் தொகை! - அதிமுகவின் 3-ம் கட்ட தேர்தல் வாக்குறுதிகள்!மணிப்பூரில் இடம்பெயர்ந்த மக்களுக்கு 5,000 வீடுகள்: மத்திய அரசு ஒப்புதல்!திமுகவுடன் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை: குழு அமைத்தது இந்திய கம்யூ. கட்சி!கல்வியால் சிறக்கும் அரசுப் பள்ளி மாணவர்கள்: முதல்வர் மு.க. ஸ்டாலின் பெருமிதம்!ஜெயலலிதா மறைந்தபிறகு கட்டாயப்படுத்தி என்னை முதல்வராக்கினார்கள்: ஓபிஎஸ்ஒவ்வொரு குடும்பத்துக்கும் ரூ. 10,000 கருணைத் தொகை! - அதிமுகவின் தேர்தல் வாக்குறுதிகள்!
/

சர்வதேச செவிலியர்கள் நாள்: ராகுல் காந்தி வாழ்த்து

உலக செவிலியர் நாளையொட்டி, சுகாதாரத் துறையின் முதுகெலும்பான செவிலியர்களுக்கு காங்கிரஸ் மக்களவை உறுப்பினர் தனது வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார். 

News image
Updated On :1 பிப்ரவரி 2024, 9:14 am

DIN


உலக செவிலியர் நாளையொட்டி, சுகாதாரத் துறையின் முதுகெலும்பான செவிலியர்களுக்கு காங்கிரஸ் மக்களவை உறுப்பினர் தனது வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார். 

உலக செவிலியர் அமைப்பு இந்நாளை 1965 -ஆம் ஆண்டிலிருந்து அனுசரித்து வருகிறது. ஜனவரி 1974 -இல், நவீன செவிலியர் பணிக்கான நிறுவனராகக் கருதப்படும் இங்கிலாந்தைச் சேர்ந்த ஃபுளோரென்ஸ் நைட்டிங்கேள் பிறந்த நாளான மே 12 ஆம் நாளை சர்வதேச செவிலியர் நாளாக ஆண்டுதோறும் கொண்டாடப்படுகிறது.

1974 ஆம் ஆண்டிலிருந்து ஐக்கிய அமெரிக்கா, கனடாவில் மே 9 முதல் மே 15 வரை செவிலியர் வாரமாகக் கொண்டாடப்படுகிறது.

சுகாதாரத் துறைக்கும், சமூகத்திற்கு  தன்னலமற்ற சேவைகளை வழங்கி வரும் செவிலியர்களை கொண்டாடும் வகையில் இந்த நாள் அனுசரிக்கப்படுகிறது. 

2022 ஆம் ஆண்டு சர்வதேச செவிலியர் நாளில், “தலைமைக்கான ஓர் குரல் - சர்வதேச சுகாதார பாதுகாப்புக்கு செவிலியர் பணியில் முதலீடு மற்றும் மரியாதைக்குரிய உரிமைகள்’’ என்ற தலைப்பில் கொண்டாடப்படுகிறது. 

இந்நிலையில் காங்கிரஸ் கட்சி மக்களவை உறுப்பினர் ராகுல்காந்தி செவிலியர்களுக்கு தனது வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார். 

அவர் சுட்டுரையில் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில்,  நமது சுகாதார கட்டமைப்பின் முதுகெலும்பாக விளங்கும் செவிலியர்களுக்கு தலை வணங்குகிறேன்.

செவிலியர்களின் அர்ப்பணிப்புக்கும், கடின உழைப்பும் நம்மை ஆரோக்கியமாக வைத்து காத்து வருகின்றனர். அவர்களுடைய தன்னமில்லா சேவைகளுக்கும் நன்றி என தெரிவித்துள்ளார். 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.