ஈரானுடனான அமைதிப்பேச்சு ரத்து! அமெரிக்க பிரதிநிதிகள் குழு தாயகம் திரும்ப டிரம்ப் உத்தரவுஐபிஎல்: ராஜஸ்தானுக்கு எதிராக ஹைதராபாத் அணி அபார வெற்றிபட்டியலின சமூகங்களுக்கு உள் ஒதுக்கீடு வழங்க கர்நாடக அமைச்சரவை ஒப்புதல்!திருச்சி - தாம்பரம் இடையே நாளை(ஏப். 26) சிறப்பு ரயில்! நீதி ஆயோக் துணைத் தலைவராக முன்னாள் தலைமைப் பொருளாதார ஆலோசகர் நியமனம்!மேற்கு வங்க பாஜக எம்எல்ஏவுக்கு நீதி ஆயோக் துணைத் தலைவர் பதவி: பிரதமரைச் சந்தித்து வாழ்த்து டெல்லி வீரர் லுங்கி இங்கிடிக்கு தலையில் காயம்! ஆம்புலன்ஸில் அழைத்துச் செல்லப்பட்டார் தெலங்கானா மேலவை உறுப்பினராகிறார் அசாருதீன்: ஆளுநர் ஒப்புதல்!அதானி நிறுவனத்தின் உண்மையான பெயர் மோதானி: ராகுல் கடும் தாக்கு
/

என்று மாறும் இந்த நிலை? 10 கி.மீ. மகளின் உடலை சுமந்து சென்ற தந்தை

சத்தீஸ்கர் மாநிலத்தில், மருத்துவமனையில் மரணமடைந்த தனது மகளின் உடலை சுமார் 10 கி.மீ. தொலைவுக்கு அவரது தந்தையே தனது தோளில் சுமந்து சென்றுள்ளார்.

News image

என்று மாறும் இந்த நிலை? 10 கி.மீ. மகளின் உடலை சுமந்து சென்ற தந்தை

Updated On :26 மார்ச் 2022, 6:39 am


சத்தீஸ்கர் மாநிலத்தில், மருத்துவமனையில் மரணமடைந்த தனது மகளின் உடலை சுமார் 10 கி.மீ. தொலைவுக்கு அவரது தந்தையே தனது தோளில் சுமந்து சென்றுள்ளார்.

மகள் மரணமடைந்த வேதனையுடன், அவரது உடலை தந்தை தனது தோளில் சுமந்து செல்லும் விடியோ சமூக வலைத்தளங்களில் அதிகம் பேரால் பகிரப்பட்டு வருகிறது.

இது குறித்து சத்தீஸ்கர் மாநில சுகாதாரத் துறை அமைச்சர் டி.எஸ். சிங் டியோ கூறுகையில், மகளின் உடலை தந்தை தோளில் சுமந்து செல்லும் சம்பவம் குறித்து விசாரணை நடத்தி அறிக்கை சமர்ப்பிக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது என்றார்.

இது குறித்து பிடிஐ செய்தி நிறுவனம் வெளியிட்டிருக்கும் தகவலில், சத்தீஸ்கர் மாநிலம், சிர்குஜா மாவட்டம் லகன்பூர் கிராமத்தைச் ச்ரந்த சிறுமி, உடல்நலம் பாதிக்கப்பட்டு, அருகில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு கடந்த சில நாள்களாக கடுமையான காய்ச்சல் ஏற்பட்டு, ஆக்ஸிஜன் அளவு 60க்கும் கீழ் குறைந்துள்ளது. மருத்துவமனையில் உரிய சிகிச்சை அளிக்கப்பட்டும் அவர் வெள்ளிக்கிழமை காலை மரணமடைந்தார். 

இது குறித்து அவரது பெற்றோருக்கு தகவல் அளிக்கப்பட்டு, உடலை எடுத்துச் செல்லும் வாகனம் வரும் வரை காத்திருக்குமாறு கூறினோம். ஆனால் அதை அவர்கள் கேட்காமல் உடலை எடுத்துச் சென்றுவிட்டனர் என்று ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர்கள் கூறியிருப்பதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.