ராஜஸ்தானுக்கு எதிரான ஐபிஎல் ஆட்டத்தில் ஹைதராபாத் அணி முதலில் பந்துவீச்சுடெல்லி வீரர் லுங்கி இங்கிடிக்கு தலையில் காயம்! ஆம்புலன்ஸில் அழைத்துச் செல்லப்பட்டார் தெலங்கானா மேலவை உறுப்பினராகிறார் அசாருதீன்: ஆளுநர் ஒப்புதல்!மக்கள் எதிர்பார்த்த விடுதலை மே 4-ல் கிடைக்கும்: நிர்மல் குமார்அதானி நிறுவனத்தின் உண்மையான பெயர் மோதானி: ராகுல் கடும் தாக்குதிமுகவே மீண்டும் ஆட்சி; விஜய்யால் அரசியல் சூழல் மாறும்: திருமாவளவன்நீட் தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியீடு எப்போது? என்டிஏ அறிவிப்பு
/

எதிர்க்கட்சிகளின் வேட்பாளர் யஷ்வந்த் சின்ஹ? குடியரசுத் தலைவர் தேர்தல் களத்தில்...

குடியரசுத் தலைவர் தேர்தலில் எதிர்க்கட்சிகளின் சார்பில் பொது வேட்பாளராக முன்னாள் மத்திய அமைச்சர் யஷ்வந்த் சின்ஹ அறிவிக்கப்படலாம்.

News image

குடியரசுத் தலைவர் தேர்தலில் எதிர்க்கட்சிகளின் வேட்பாளர் யஷ்வந்த் சின்ஹ?

Updated On :21 ஜூன் 2022, 8:14 am

குடியரசுத் தலைவர் தேர்தலில் எதிர்க்கட்சிகளின் சார்பில் பொது வேட்பாளராக முன்னாள் மத்திய அமைச்சர் யஷ்வந்த் சின்ஹ போட்டியிடக் கூடிய வாய்ப்பு உருவாகி வருகிறது.

திரிணமுல் காங்கிரஸில் இணைந்து செயல்பட்டு வந்த யஷ்வந்த் சின்ஹ, எதிர்க்கட்சிகளின் ஒற்றுமை, தேசிய நலன் கருதி, கட்சியிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். 

குடியரசுத் தலைவர் தேர்தலில் போட்டியிடப் பொது வேட்பாளராக யஷ்வந்த் சின்ஹ பெயரைத் திரிணமுல் காங்கிரஸ் தலைவரும் மேற்கு வங்க முதல்வருமான மம்தா பானர்ஜி பரிந்துரைத்துள்ளதாகக் கூறப்பட்ட நிலையில் இந்த முடிவை அறிவித்துள்ளார் சின்ஹ.

Story image

தனக்கு மம்தா அளித்துவந்த மதிப்புக்கும் மரியாதைக்கும் மிக்க நன்றி என்று குறிப்பிட்டுள்ள சின்ஹ, நாட்டு நலன் கருதித் தாம் கட்சியிலிருந்து விலக  வேண்டியுள்ளதாகவும் இதை மம்தாவும் ஒப்புக்கொள்வார் என்றும்  ட்விட்டர்  பதிவொன்றில் தெரிவித்துள்ளார்.

குடியரசுத் தலைவர் தேர்தலில் எதிர்க்கட்சிகளின் சார்பில் போட்டியிடும் பொது வேட்பாளரைத் தெரிவு செய்வதற்கான கூட்டம், இன்று பிற்பகலில் தில்லியில் நடைபெறவுள்ளது குறிப்பிடத் தக்கது.

இந்தக் கூட்டத்தின் முடிவில் வேட்பாளராக சின்ஹவை அறிவிக்கும் வாய்ப்பு இருக்கிறது.

ஏற்கெனவே, எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராகப் போட்டியிடும் வாய்ப்பை தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார், ஜம்மு - காஷ்மீர்  தேசிய மாநாட்டுக் கட்சித் தலைவர் பாரூக் அப்துல்லா, மகாத்மா காந்தியின் பேரன் கோபாலகிருஷ்ண காந்தி ஆகியோர் மருத்துவிட்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.