மத்தியப் பிரதேசத்தின் சாகர் மாவட்டத்தில் ஒரே ஊசியில் 30-க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஜூலை 27-ல் ஜெயின் பப்ளிக் பள்ளியில் மாணவர்களுக்கான தடுப்பூசி முகாம் ஏற்பாடு செய்யப்பட்டு, செவிலியர் மாணவி ஒருவர் தடுப்பூசி போடும் பணியில் ஈடுபடுத்தப்பட்டார்.
தடுப்பூசி போடும்போது, செவிலியர் ஊசி மாற்றாததை ஒரு மாணவரின் தந்தை பார்த்துள்ளார். இதைப் பற்றி விசாரித்தபோது, தன்னிடம் ஒரே ஒரு சிரஞ்ச் மட்டுமே இருப்பதாக கூறி செவிலியர் தன்னை தற்காத்துக் கொண்டார்.
முகாமில் தடுப்பூசி போடப்பட்ட அனைத்து மாணவர்களின் பெற்றோர்கள் செவிலியர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரிக்கை விடுத்தனர்.
இதையும் படிக்கலாம்| ஆசியக் கோப்பை டி20 போட்டி எங்கு நடைபெறுகிறது?: அதிகாரபூர்வ அறிவிப்பு
அலட்சியம் மற்றும் ஒரு ஊசி - ஒரு சிரிஞ்ச் - ஒரே முறை என்ற நெறிமுறையை மீறிய குற்றத்திற்காக செவிலியர் மீது எப்ஐஆர் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
இதுகுறித்து, தடுப்பூசி குழுவை அனுப்பும் பொறுப்பில் இருந்த மாவட்ட நோய்த்தடுப்பு அலுவலர் டாக்டர் ராகேஷ் ரோஷனிடம் விசாரணை நடத்தப்பட்டது.
மாநில அரசின் சுகாதாரத் துறைக்கு தெரிவித்துள்ளதாகவும், முகாமில் தடுப்பூசி போடப்பட்ட அனைத்து மாணவர்களின் மாதிரிகளையும் சேமிக்கத் தொடங்கியுள்ளதாகவும் மருத்துவ அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
மேலும், விதிமுறைகளை மீறுபவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் தெரிவித்தார். இதுதொடர்பாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

எஸ்ஐஆா் பணிகளாலும் வாக்குப்பதிவு அதிகரிப்பு!

வாக்கு சதவிகிதம் அதிகரிப்பா? தலைமைத் தேர்தல் ஆணையரின் நகைச்சுவை: திமுக

அதிருப்திக்கு மத்தியிலும் நரிக்குறவா்கள் ஆா்வமுடன் வாக்களிப்பு

20 நிமிஷத்தில் 1,320 கிலோ அரிசி வேக வைக்கும் பாத்திரம்
வீடியோக்கள்

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை

பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு தொடக்கம்! | #Ajith | #EPS | #Seeman |
தினமணி செய்திச் சேவை

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை


