திருச்சி மாவட்டத்தில் திரும்பிப் பார்க்க வைத்த திருவெறும்பூர் தொகுதி! காரணம் என்ன?வாக்குச்சாவடியாகும் பள்ளிகளை சுத்தம் செய்வது யார் பொறுப்பு?கடந்த ஆண்டு பள்ளியில் ஆசிரியை கொலை! பழிக்குப் பழியாக இளைஞரைக் கொன்ற தந்தை!!யமுனையில் படகு சவாரி செய்து பாருங்கள்! மோடியைக் கேலி செய்த மமதா!வாக்களித்த பிறகு சென்னை திரும்பும் மக்கள்! பேருந்து, ரயில்களில் அலைமோதும் பயணிகள் கூட்டம்!வெற்றி வாய்ப்பு எப்படி இருக்கிறது? மதுரையில் மு.க. ஸ்டாலின் பதில்! புதிய கட்சி தொடங்கினார் சந்திரசேகர் ராவின் மகள் கவிதா! தமிழ்நாட்டில் எந்த வாக்குச்சாவடியிலும் மறு வாக்குப்பதிவு இல்லை! - தேர்தல் ஆணையம்தங்கம் விலை சவரனுக்கு ரூ. 800 உயர்வு! வெள்ளி விலையும் உயர்ந்தது!
/

ஜம்மு-ஸ்ரீநகர் தேசிய நெடுஞ்சாலை மீண்டும் மூடல்

ஜம்மு-காஷ்மீரின் ராம்பன் மாவட்டத்தில் பல இடங்களில் பெய்த கனமழையால் ஏற்பட்ட நிலச்சரிவு காரணமாக ஜம்மு-ஸ்ரீநகர் தேசிய நெடுஞ்சாலை மூடப்பட்டுள்ளது. 

News image
Updated On :21 ஜூலை 2022, 6:29 am


ஜம்மு-காஷ்மீரின் ராம்பன் மாவட்டத்தில் பல இடங்களில் பெய்த கனமழையால் ஏற்பட்ட நிலச்சரிவு காரணமாக ஜம்மு-ஸ்ரீநகர் தேசிய நெடுஞ்சாலை மூடப்பட்டுள்ளது. 

அமர்நாத் பயணிகளை ஏற்றிச் செல்லும் கான்வாய் பகுதியில் ஏறக்குறைய 1000 வாகனங்கள் சிக்கித் தவிக்கின்றன. 

காஷ்மீரை நாட்டின் மற்ற பகுதிகளுடன் இணைக்கும் ஒரே நெடுஞ்சாலை இதுவாகும். மேலும், ராம்பான் மாவட்டத்தில் நான்கு இடங்களில் கற்கள், நிலச்சரிவுகளால் போக்குவரத்து தடை செய்யப்பட்டது.

கற்கள் உருண்டு விழுந்துள்ளதன் காரணமாக புதன்கிழமை இரவு முதல் மூர் ராம்பானில் நெடுஞ்சாலை மூடப்பட்டுள்ளது.

காஷ்மீர் செல்லும் அமர்நாத் பயணிகளை ஏற்றிச் செல்லும் வாகனங்கள் கான்வாய் மற்றும் சித்ரகூட் மற்றும் நஷ்ரியில் நிறுத்தப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். சாலையைச் சீரமைக்கும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

முன்னதாக நேற்று ஒருசில இடங்களில் ஏற்பட்ட நிலச்சரிவு காரணமாக தேசிய நெடுஞ்சாலை சில மணி நேரம் மூடப்பட்டது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.